தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது சங்கர் தான். இவர் மிகப்பெரிய பொருட் செலவில் படத்தை எடுத்து வெற்றி பெற வைப்பதில் வல்லவர். அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளியாகி பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில் 2005 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம்தான் அந்நியன்.
இந்த திரைப்படத்தில் விக்ரம், சதா, விவேக் என பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்தில் விக்ரம் மூன்றுவிதமான கெட்டப்களில் நடித்து அசத்தியிருப்பார்.
ஒரு கதாபாத்திரத்தில் அந்நியனாகவும் ஒரு கதாபாத்திரத்தில் ரெமோவாகவும் மற்றொரு கதாபாத்திரத்தில் அம்பியாகாவும் நடித்திருந்தார். மேலும் அந்நியன் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. அன்னியன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 வருடங்கள் நிறைவடைந்துவிட்டது திரைப்படம் குறித்த சங்கர் அவர்கள் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்தார்.
அந்தப் பேட்டியில் சங்கர் அவர்கள் கூறியதாவது நான் வேறு ஒரு திரைப்படம் பண்ணிக் கொண்டிருந்த பொழுது விக்ரம் அவர்களிடம் அந்நியன் படம் குறித்து சொன்னேன் அதற்கு ஓகே சொல்லிவிட்டார் உடனே அந்தத் திரைப்படத்திற்கு நீங்கள் ஆயத்தமாகிக் கொள்ளுங்கள் என விக்ரம் அவர்களிடம் கூறியுள்ளார் அதுமட்டுமில்லாமல் முடியை நீளமாக வளர்த்துக் கொள்ளவும் எனவும் சொல்லிவிட்டார் சங்கர்.
ஆனால் அப்பொழுது விக்ரம் அவர்களுக்கு ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் முடியை வளர்க்க முடியவில்லை முடிக்காக ரொம்ப நாள் வைட் செய்ய முடியாது என சில காட்சிகளை விக் வைத்து எடுத்தோம். அதேபோல் அந்நியனாக மாறும் பொழுது கண்கள் மாறி மாறி விட வேண்டும் என கூறினேன் அதனால் அதற்கு பிராக்டிஸ் செய்து கொண்டார் விக்ரம். அதே போல் விக்ரம் அந்த திரைப்படத்தின் பல ஐடியாக்களை கொடுத்துள்ளார்.
அதிலும் அந்த விசாரணையின் மிகவும் சவாலாக அமைந்தது அதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் அருகிலேயே ஜிம் எக்யூப்மென்ட் வைத்துக்கொண்டு உடலை ஃபிட்டாக வைத்துக் கொண்டு நடிப்பாக மாறும்பொழுது தொப்பை தெரிய வேண்டுமென அதிகமாக தண்ணீரை குடித்துவிட்டு நடித்துக் கொடுத்தார். திரைப்படத்தில் நடிக்கும் பொழுது இவர் மிகவும் கஷ்டப்பட்டார் மிகவும் திறமையான கலைஞர் விக்ரம் என அந்த பேட்டியில் சங்கர் அவர்கள் கூறினார்.