ட்ரெய்லர் வெளியான 4 மணி நேரத்தில் புதிய சாதனை.! அனல் பறக்க பறக்க அடுத்த ரெக்கார்ட் தான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படம் என்றாலே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் அதுமட்டுமில்லாமல் பல இயக்குனர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படத்தை இயக்க வேண்டும் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் சிறுத்தை சிவாவுக்கு விஸ்வாசம் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தை இயக்கி வந்தார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படக்குழு படத்தின் அப்டேட்களை தெரிக்கவிட்ட வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது அது மட்டும் இல்லாமல் பல சாதனைகளையும்  நிகழ்த்தியது.அதேபோல் அண்ணாத்த  படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

மேலும் படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். அண்ணாத்த படத்தின் டீசரில் ரஜினியின் காட்சிகள் மட்டுமே வெளியிடப்பட்டது அதனால் மற்ற நடிகர்களுக்கு மிகப்பெரிய  கதாபாத்திரம் இல்லை என ரசிகர்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள்.

இந்த நிலையில் படக்குழு படத்தின் டிரைலரை வெளியிட்டு ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வெட்ட வெளிச்சமாக காட்டியுள்ளார்கள். மேலும் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் புரொமோஷன் வேலைகளில் படு பயங்கரமாக பணியாற்றி வருகிறது படக்குழு. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு குடும்பம் திரைப்படமாக இந்த திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் டிரைலர் வெளியாகி நான்கு மணி நேரத்தில் மூன்று மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து மாபெரும் சாதனையை நிகழ்த்தியது மேலும் இதில் 3 லட்சத்து 32 ஆயிரம் லைக் பெற்றுள்ளது அதுமட்டுமில்லாமல் 5 ஆயிரத்து 800 டிஸ் லைககளையும் பெற்றுள்ளது.

மேலும் இந்த ட்ரைலர் 24 மணி நேரத்தில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment