அண்ணாத்த ரிலீஸ் தேதியை அதிரடியாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்.! மோதுவதற்கு தயாரா வரிசையில் வாங்க.!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் கடைசியாக தர்பார் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து தற்போது அவர் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துவருகிறார் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. விசுவாசம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவா அவர்கள் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் ரஜினிகாந்த்துடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் போன்ற மிகப் பெரிய பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் எடுக்கப்பட்ட வந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் இதன் பணிகள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டன.

இதனையடுத்து இப்படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக சன்  பிக்சர்ஸ் நிறுவனம் பொங்கலன்று அண்ணாத்த படம் ரிலீஸ் ஆகும் என தற்போது கூறியுள்ளது இதனால் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர் இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டு பொங்கலில் பேட்ட படமும், 2020 ஆம் ஆண்டு தர்பார் படமும் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment