அண்ணாத்த படம் எப்படி இருக்கு இதோ திரைவிமர்சனம்.!

ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் என்றாலே ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டம்தான் ஏனென்றால் ரஜினி திரைப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவி வருகிறது. ஆனால் சமீபத்தில் வந்த திரைப்படங்கள் ரஜினி ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாட முடியாமல் போனது. அதனால் ரஜினி வேறு ஒரு திசையில் திரும்பி விட்டாரோ என ரஜினி ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தார்கள்.

இந்த நிலையில் ரஜினி மீண்டும் தனது பழைய நிலைமைக்கு வந்து விட்டார் என மிகவும் கொண்டாட்டத்தில் கொண்டாட வைத்த திரைப்படம்தான் அண்ணாத்த.  சிறுத்தை சிவா சமீபத்தில் இயக்கிய பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளன அதுமட்டுமில்லாமல் மிகக்குறுகிய காலத்திலேயேமிகப் பெரிய இயக்குனராக உருவெடுத்து விட்டார்.

இந்த நிலையில் விசுவாசம் ஸ்டைலில் கிராமம் குடும்பம் உறவினர் என முதல் பாகமும் வேதாளம் திரைப்படத்தை போல் தங்கைக்காக எதையும் செய்யும் துணிச்சலான அண்ணன் என இரண்டாவது பாதியும் ரஜினி கலக்கியுள்ளார். ஒரே ஒரு சொல்லில் சொல்ல வேண்டுமென்றால் ரஜினி ரசிகர்களை மயக்கி விட்டார் என்றுதான் கூறவேண்டும். உரும் உறவினரும் அண்ணாத்த ரஜினியை கொண்டாடுவார்கள்.

அதே போல் தங்கை கீர்த்தி சுரேஷ் மீது அதிக பாசம் வைத்திருந்தார் அண்ணன் சந்தோஷமே தனது சந்தோஷம் என தனது காதலை கூட மறைத்து அண்ணன் ரஜினி பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்ய ஒத்துக் கொள்வார் ஆனால் ஒரு காலகட்டத்தில் திருமணத்திற்கு முதல் நாள் தான் காதலித்து அவருடன் ஓட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

தன்னுடைய தங்கை ஓடிப் போனால் என்பதை அறிந்து கொண்ட ரஜினிகாந்த் தங்கையை தேடிக்கொண்டு கொல்கத்தா செல்கிறார் அங்கு மிகவும் ஏழ்மையான நிலையில் பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார் கீர்த்தி சுரேஷ். அது ஏன் என்பதை தெரிந்து கொண்ட தனது தங்கைக்காக என்ன செய்தார் என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

70 வயதில் ரஜினிகாந்த் எப்படி இப்படி ஒரு எனர்ஜியுடன் நடித்து உள்ளார் என அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது. ரஜினி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது ரஜினியின் டயலாக் மாஸ் வசனம் தான் அதனை எப்படி முழு எனர்ஜியுடன் படம் முழுக்க பேசி அசத்தியுள்ளார். அதேபோல் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை ரஜினியின் நடிப்பும் காமெடிக்கும் ஒருபோதும் குறையே இருக்கவே இருக்காது.

அதேபோல் படத்தில் கலகலப்பாக சூரி காமெடியில் அசத்தி உள்ளார் இடைவெளிக்கு பின்பு படத்தில் பாட்ஷா, படையப்பா, அருணாச்சலம் என அந்த காலத்து ரஜினியை மீண்டும் பார்க்கத் தோன்றுகிறது. அதே போல் தங்கை சென்டிமென்டில் பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. ரஜினிகாந்த் அவர்கள் உடன் நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளது பெரும்தன்மைதான் ஏனென்றால் அவருக்கு படத்தில் முக்கியத்துவம் மிக மிக குறைவு.

நயன்தாராவை பார்த்தவுடன் காதல் உடனே கல்யாணம் என கொஞ்சம் ஓவராக காட்டிவிட்டார்கள் கீர்த்தி சுரேஷ் திருமண நிகழ்வுகள் சலிப்புத் தட்டுகிறது.முதலில் அன்பான தங்கச்சி பிறகு அழுகை தங்கச்சி. அண்ணன் சந்தோசம் தான் தனது சந்தோஷம் என இருந்தவர் அண்ணனை தலை குனிய வைத்து விட்டு ஓடிப் போனது நம்பும்படி இல்லை.

மீனா மற்றும் குஷ்பு இவர்கள் இந்த திரைப்படத்தில் நடித்து இருப்பதால் அவர்களுக்கு முக்கியமான கதாபாத்திரம் இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. ரஜினியின் முறைப் பெண்ணாக நடித்த இவர்கள் காமெடியில் கலக்கினார்கள் என்றும் கூறலாம். தம்பி வில்லனாக அபிமன்யு சிங் அண்ணன் வில்லனாக ஜெகபதி பாபு.

முதலாவதாக இந்தி வில்லன் போலவும் இரண்டாவதாக தெலுங்கு வில்லன் போலவும் இருக்கிறார்கள்.  இந்த திரைப்படம் ஹிந்தி தெலுங்கு எனபழமொழிகளில் உருவாகி இருபதால் இந்த திரைப்படத்தை இப்படி வைத்து விட்டார்கள் என கூறப்படுகிறது. ரஜினியின் அட்வைஸால் கெட்டவனாக இருந்து நல்லவனாக மாறும் ஊர் பெரிய தலைவர் பிரகாஷ் ராஜ் ரஜினியுடன் கூடவே இருக்கும் பரோட்டா சூரி என அவரவர் நடிப்பை சிறப்பாக நடித்துள்ளார்கள்.

இமான் இசையில் பாடல்கள் ரசிகர்களிடம் ஓரளவு ரசிக்க வைத்துள்ளது அதேபோல் பின்னணி இசையில் இமான் அசத்தியுள்ளார். பக்கா கமர்ஷியல் மசாலா திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது.  அதேபோல் ரஜினி திரைப்படத்திற்கு என்ன விருவிருப்பு  வேண்டும் என பார்த்து படத்திற்கு எடிட் செய்துள்ளார் ரூபன் ஆண்டனி.

இந்த திரைப்படத்தை பார்த்தால் விஜய் நடித்த திருப்பாச்சி மற்றும் ஒரு சில படத்தின் சாயல்கள் இருக்கிறது. இருந்தாலும் ரஜினி ரசிகர்கள் கொண்டாடும் படியாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது.

Leave a Comment