சூப்பர் ஸ்டார் அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் என்ப்போழுது தெரியுமா.? வெளியான மாஸ் தகவல்

தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்திலும் சரி இன்றைய காலகட்டத்திலும் சரி ஒரு முன்னணி நடிகராகவும் மற்றும் சூப்பர் ஸ்டாராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் அன்றைய காலகட்டத்திலிருந்து தமிழ்சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் பேட்ட, தர்பார் ஆகிய இரண்டு திரைப்படமும்  ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த  படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா அவர்கள் இயக்கியுள்ளார் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. இறுதிகட்ட பணிகள் நடைபெற்று  வருகிறது. தீபாவளியை முன்னிட்டு அண்ணாத்த படம் வெளியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஜினிகாந்த் அவர்கள்டப்பிங் பேசி விட்டார். தற்போது மற்ற நடிகர்-நடிகைகள் டப்பிங் பேசி வந்து கொண்டிருக்கும் நிலையில் அண்ணாத்த திரைப்படத்தில் அப்டேட்களை ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

annaatthe

இந்த நிலையில் ரஜினியின் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை பற்றி படக்குழு எந்த ஒரு தகவலையும் வெளியிடாத காரணத்தால் வருகின்ற செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று ஒரு செய்தியை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றனர்.

இருந்தாலும் அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பற்றி இன்று வரையிலும் படக்குழுவினர் எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Exit mobile version