அண்ணாத்த படம் வெளிநாட்டில் புதிய சாதனை : இதுவரை எந்த ஒரு நடிகரின் படமும் இப்படி செஞ்சதே கிடையாதாம்.? கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்.

விசேஷ நாட்களில் டாப் நடிகர்கள் படங்கள் வெளிவருவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் தீபாவளியன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர் அதிலும் குறிப்பாக 90 காலகட்டங்களில் ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகைகள் இந்த படத்தில் நடித்து அசத்தி உள்ளனர்.

அந்த பிரபலங்கள் வேறு யாருமல்ல குஷ்பு மற்றும் மீனா தான் இவர்கள் இந்த படத்தில் ரஜினிக்கு அத்தையோ அல்லது மாமன் முறையோ வேண்டும். ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார் தங்கையாக கீர்த்தி சுரேஷ் காமெடியனாக சூரி போன்ற பலரும் நடித்துள்ளனர். படத்தை பார்த்த ஒரு சில பிரபலங்கள் பார்த்து அசந்து போயுள்ளனர்.

அந்த அளவிற்கு படம் சூப்பராக இருப்பதாக கூறப்படுகிறது தற்போது படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாக டிக்கெட் புக்கிங் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டுமே இதுவரை 10 கோடிக்கு டிக்கெட் புக்கிங் நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் திரையரங்குகளை கைப்பற்றிய என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சூப்பரான சாதனையை தற்போது நிகழ்த்தி உள்ளது அண்ணா திரைப்படம் அதாவது வெளிநாடுகளில் மட்டும் சுமார் 1200 திரையரங்குகளில் அண்ணாத்த படம் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை எந்தவொரு தமிழ் சினிமா பிரபலங்களின் படங்கள் இந்த அளவுக்கு அதிக திரையரங்குகளில் வெளியிட்டதே கிடையாதாம் முதல் முறையாக அண்ணா திரைப்படம் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment