வேட்டி சட்டையில் மாப்பிள்ளை மாதிரி செம்ம ஜம்முனு இருக்கும் அண்ணாத்த ரஜினி.! படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.

ஒரு சூப்பர் ஸ்டாரின் திரைப்படம் தொடர்ந்து பல சிக்கல்களை சந்தித்தால் அது படக்குழுவை பெரிசாக பாதிக்கிறதோ இல்லையோ ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகிறது. ஏனென்றால் குறித்த நேரத்தில் படம் வெளிவராமல் போய்விட்டால் ரசிகர்கள் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றத்தை சந்திப்பார்கள்.

அப்படிதான் சூப்பர் ஸ்டாரின் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் பல தடைகளைத் தாண்டி அண்ணாத்த திரைப்படம் எடுக்க முயற்சித்தாலும் எல்லாம் ஏமாற்றத்தையே சந்தித்தன.

இருப்பினும் ரஜினி ரசிகர்கள் ஏமாற்றத்தைச் சந்திக்க கூடாது என்பதற்காக தனது உடலையும் தாண்டி படத்தை எடுக்க தீவிரம் காட்டினார் ஆனால் ஒரு கட்டத்தில் இதில் பணியாற்றிய ஒரு சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் உடனடியாக சென்னை வந்தார்.

ஒரு சில மாதங்கள் கழித்து தற்போது சென்னையில் படப்பிடிப்பு எடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஹைதராபாத்திற்கு ரஜினி மற்றும் நடிகைகள் பலரும் கிளம்பி படத்தை முடிக்க கடினமாக நடித்து வருகின்றனர்.

இச்செய்தி ரஜினி ரசிகர்களை குதூகலம் அடைய செய்த்து இதை விட வேற லெவல் புகைப்படம் துள்ளல் ஆட்டம் போடா வைத்துள்ளது.

சிறுத்தை சிவாவும், ரஜினி ஆகியோர் இருக்கும் புகைப்படத்தை தற்போது வெளியிட்டு உள்ளது அதில் ரஜினி வேட்டி சட்டையுடன் வேற லெவல் இருக்கும் புகைப்படம்.

Leave a Comment