அண்ணாமலை சீரியலில் நடித்த நடிகை ஐஸ்வர்யா இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி விட்டாரே வைரலாகும் புகைப்படம்.!

aishwarya
aishwarya

பொதுவாக வெள்ளித்திரையில் நடித்து வரும் நடிகைகள் பலரும் வெள்ளித்திரையில் வாய்ப்பு குறைந்து விட்டால் சின்னத்திரை பக்கம் படையெடுக்க ஆரம்பித்து விடுவார்கள் அதேபோல் சமீபகாலமாக சின்னத்திரையில் புகழை அடைந்த பிறகு வெள்ளித்திரையில் கால்தடம் பதித்து வெள்ளித்திரையிலும் பல நடிகைகள் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி இருக்கும் வகையில் தொலைக்காட்சி தொடர்களில் மிகவும் கொடிகட்டி பறந்த பல நடிகைகள் தற்போது என்ன செய்கிறார்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியாமல் இருக்கிறது அந்த வகையில் அண்ணாமலை சீரியலில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்த நடிகை ஐஸ்வர்யா என்ன செய்கிறார் என்றே தெரியாமலே இருந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அண்ணாமலை சீரியல் நடிகை ஐஸ்வர்யா. நடிகை ஐஸ்வர்யா ஆரம்ப காலகட்டத்தில் டிவி சீரியல்களில் மட்டுமே நடித்து வந்தார் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது சீரியல்தான் அண்ணாமலை. இந்த சீரியலை ராதிகாதான் தயாரித்திருந்தார்.

அண்ணாமலை சீரியலில் நடிகை ஐஸ்வர்யா போதைக்கு அடிமையான பெண்ணாக நடித்து இருப்பார் அந்த கதாபாத்திரத்தில் இவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இந்த சீரியலை தொடர்ந்து இவருக்கு வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியாகிய  ஏப்ரல் மாதத்தில் என்ற திரைப்படத்தில் தோழி கதாபாத்திரத்திலும்.

அதேபோல் டும் டும் டும் என்ற திரைப்படத்தில் ஜோதிகாவின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இவருக்கு ஒரு சில திரைப்படங்களில் ஒரு சில கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இதனைத்தொடர்ந்து அவர் திடீரென திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு நடிப்பில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

annamalai serial
annamalai serial

மேலும் இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் நான் நடிப்பதை விட்டு பத்து வருடங்கள் ஆகிவிட்டது ஆனாலும் என்னை ஞாபகம் வைத்துக் கொண்டு பேட்டி எடுக்கிறார்கள் அவர்களுக்கு மிகவும் நன்றி என கூறியிருந்தார் திருமணத்திற்கு பிறகு துபாய்க்கு போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் நடிக்க முடியாமல் போனது.

அதன் பிறகு எனக்கு பையன் பிறந்து விட்டான் அவனைப் பார்த்துக் கொள்வதே எனக்கு முழு நேர வேலையாக இருந்தது சமீபத்தில் கனடாவில் சூப்பர் சிங்கர் மாறி வரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என அந்த பேட்டியில் கூறினார்.

annamalai serial
annamalai serial