சிவகார்த்திகேயனை ஓரம் கட்டிய அண்ணாச்சி.! பாக்ஸ் ஆபீஸ் தகவல் இதோ..

தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்து தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். சினிமாவில் குறுகிய காலத்திலேயே வளர்ச்சி அடைந்து யாரும் நினைத்துப் பார்க்காத அளவிற்கு புகழின் உச்சத்தில் இருந்து வருகிறார்.

அந்த வகையில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய்க்கு நிகராக ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருவதற்கு அவரது கடின உழைப்பை காரணம் தன்னுடைய விடா முயற்சியினால் விஸ்வரூப வெற்றியை கண்டு வந்தார்., இப்படிப்பட்ட நிலையில் மிஸ்டர் லோக்கல் ஹீரோ உள்ளிட்ட திரைப்படங்கள் விமர்சன ரீதியாக மிகப்பெரிய தோல்வியை அடைந்தது .

எனவே தன்னுடைய இழந்த மார்க்கெட்டை பெற வேண்டும் என்பதற்காக அடுத்தடுத்து இவர் நடித்த டாக்டர், டான் போன்ற இரண்டு படங்களும் அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இப்படிப்பட்ட நிலையில் இவருடைய நடிப்பில் கடைசியாக தீபாவளிக்கு பிரின்ஸ் திரைப்படம் வெளியானது இந்த படம் மிகவும் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வந்த நிலையில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படும் தோல்வியினை சந்தித்தது பிரின்ஸ் திரைப்படம்.

மேலும் இந்த படத்தினை பார்த்து விட்டு அவரை அவருடைய ரசிகர்களே திட்டி வந்தார்கள் அந்த அளவுக்கு மோசமான விமர்சனத்தை பிரின்ஸ் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு தந்தது. இந்நிலையில் வெளிநாடுகளில் இந்த படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக மலேசியாவில் இப்படம் வசூல் படு மாசமாக இருந்ததாக சொல்லப்படுகிறது

அங்கு ஜூலை மாதம் சரவணன் அருள் நடிப்பில் வெளிவந்த படம் வசூல் செய்ததை விட பிரின்ஸ் திரைப்படம் குறைவாக வசூல் செய்திருக்கிறதாம். மலேசியாவில் லெஜண்ட் படம் ரிலீசான முதல் நாட்களில் அந்நாட்டின் மதிப்பில் MYR 162,540 தொகையை வசூல் செய்து இருந்தது. ஆனால் சிவகார்த்திகேயன் அவர்களின் பிரின்ஸ் திரைப்படம் ஆறு நாட்களில் MYR 129,272 தொகையை மட்டுமே வசூல் செய்து இருக்கிறது எனவே லெஜண்ட் படத்தை விட பிரின்ஸ் திரைப்படம் குறைந்த அளவு வசூல் செய்திருக்கிறது.

Leave a Comment