அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க வெளியாகிறது அண்ணாத்த டீஸர்.! இதோ புதிய போஸ்டர் உடன் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக சூப்பர் ஸ்டார் திரைப்படங்கள் வசூலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் அண்ணாத்த முதன்முறையாக சிறுத்தை சிவா மற்றும் ரஜினி இருவரும் இணைந்து பணியாற்றி உள்ளார்கள் அதனால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் இந்த திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தில் மறைந்த பாடகர் எஸ்பிபி கடைசியாக அண்ணாத்த திரைப்படத்தில் பாடியுள்ளார் இந்த பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

மேலும் மீனா, குஷ்பு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சமீபத்தில் ரஜினி மற்றும் நயன்தாரா டூயட் பாடி உள்ள சாரா காற்று என்ற இரண்டாவது சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது இந்த நிலையில் டீசர் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்கு செம குஷியான செய்தியாக டீசர் வருகின்ற அக்டோபர் 14-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என புதிய போஸ்டர் உடன் சன் பிக்சர் நிறுவனம் அறிவித்துள்ளது.மேலும் சன் பிக்சர் நிறுவனம் அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க அண்ணாத்த டீஸர் 14ஆம் தேதி 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளார்கள்.

Leave a Comment