அடி ஒன்னு ஒன்னும் இடி மாதிரி இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த டீசர் இதோ.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அன்றிலிருந்து இன்று வரை தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உலகம் முழுவதும் இருக்கிறது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் அப்டேட்கள் வெளிவந்த நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் கீர்த்தி, சுரேஷ், மீனா, குஷ்பூ, நயன்தாரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். மேலும் சிறுத்தை சிவா திரைப்படம் என்றாலே ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருக்கும் இந்த நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அண்ணாத்த திரைப்படத்திலிருந்து பாடல் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது இந்த நிலையில் இந்த  திரைப்படத்தின் டீசர் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இந்த டீசரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிகவும் இளமையாக சண்டைக் காட்சிகளில் பட்டையைக் கிளப்பியுள்ளார்.

ஒவ்வொரு சண்டை காட்சியும் திரையரங்கில் தெறிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே இணையதளத்தில் டிரெண்டிங்கில் இருந்து வந்தது அது மட்டுமில்லாமல் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

இதோ டீஸர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment