அம்மா உணவகம் போல் அண்ணா உணவகம் ரோஜா அதிரடி.! ஒரு சாப்பாட்டின் விலை தெரியுமா.?

0
anna unavagam
anna unavagam

நடிகை ரோஜா தமிழில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர், இவர் தமிழ் சினிமாவில் 1992ம் ஆண்டு வெளியாகிய செம்பருத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், அதனைத் தொடர்ந்து சூரியன், உழைப்பாளி, அதிரடிப்படை எனப் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் ரஜினி, சரத்குமார், சத்யராஜ், என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர், இவர் ஆர் கே செல்வமணி என்பவரை 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஒரு காலகட்டத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் ஈடுபட்டு வரும் ரோஜா தற்பொழுது ஓ எஸ் ஆர் காங்கிரஸில் இணைந்து ஆந்திர சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிறார்.

ஜெகன்மோகன் ரெட்டிக்கு பக்கபலமாக இருந்தவர் ரோஜா அதனால் அவரவருக்கு உரிய பதவியும் வழங்கி பாராட்டினார், சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ரோஜா, தனது பிறந்தநாளின் போது ஐந்து ரூபாய்க்கு உணவு வழங்கப்படும் ஹோட்டல் ஒன்றை நிறுவியுள்ளார், இதனால் பசியால் வாடும் ஏழை எளிய மக்கள் உணவு அருந்தி மகிழுந்து செல்கிறார்கள். இந்த ஹோட்டலுக்கு ஓ எஸ் ஆர் அண்ணா உணவகம் என பெயர் வைத்துள்ளார்கள், ரோஜாவில் இந்த செயலை பார்த்து பலரும் பாராட்டி வருகிறார்கள்.