மனசுல நயன்தாரான்னு நெனப்பா கோடியில் சம்பளம் கேக்குறீங்க.! அஞ்சலையின் சம்பளத்தை கேள்விப்பட்டு வாயடைத்துப்போன தயாரிப்பாளர்.!

தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகள் தங்களின் சம்பளத்தை உயர்த்தி கொண்டே செல்கிறார்கள் அந்த வகையில் பல நடிகைகள் தற்பொழுது கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார்கள். இந்த நிலையில் தற்பொழுது அஞ்சலி தன்னுடைய சம்பளத்தை ஒரேடியாக உயர்த்தி உள்ளது. தயாரிப்பாளர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முறையாக அறிமுகமானவர் அஞ்சலி இவர் தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் வெப் சீரியஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கற்றது தமிழ் திரைப்படத்தை தொடர்ந்து ஆயுதம் செய்வோம் அங்காடி தெரு, ரெட்டை சுழி மகிழ்ச்சி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் கருங்காலி, கோ, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், தம்பி வெட்டோத்தி சுந்தரம்,. கலகலப்பு என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகிய நாடோடிகள் 2, பாவ கதைகள், சிந்துபாத் ஆகிய திரைப்படங்கள் ஓரளவு வெற்றியை தான் பெற்றது. இந்த நிலையில் அஞ்சலி தற்பொழுது வெப் சீரியஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் அந்த வகையில் நவரசா, ஜான்சி, ஃபால் ஆகிய வெப் சீரியஸில் நடித்திருந்தார்.

ஆனால் இவர் நடித்துள்ள சீரியஸ் சுமாரான வரவேற்ப்பை  தான் பெற்றது தற்பொழுது ஏழுகடல் ஏழுமலை என்ற திரைப்படம் அஞ்சலி நடிப்பில்  உருவாகியுள்ளது ராம் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நிவின் பாலி சூர்யா ஆகியவர்கள் நடித்துள்ளார்கள் இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன்னும் வெளியாகாத இந்த திரைப்படத்தின் மீது அதிக நம்பிக்கை இருப்பதாக அஞ்சலி தெரிவித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் கண்டிப்பாக தன்னுடைய மார்க்கெட் உயரும் இந்த திரைப்படத்தின் மூலம் எனவும் நம்புகிறாராம்.

அதனால் இந்த திரைப்படத்திற்கு பிறகு கமிட்டாகும் அஞ்சலி தன்னுடைய சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தி விட்டாராம் கிட்டதட்ட ஒரு கோடி வரை நடிகை அஞ்சலி தற்பொழுது சம்பளத்தை உயர்த்தி உள்ளதால் தயாரிப்பாளர்கள்  சற்று கலக்கத்தில் இருக்கிறார்கள். இவர் நடித்த திரைப்படம் சுமாரான வரவேற்பை மட்டும் தான் பெறுகிறது ஆனால் கோடிகளில் சம்பளம் கேட்கிறார் என தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment