நிருப்பை கெட்ட வார்த்தையில் வண்டை வண்டையாக திட்டி அனிதா.! செம காண்டில் நிரூப் வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் கடந்த 5 வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு முடிவடைந்த நிலையில் தற்போது ஹாட்ஸ்டார் OTT இணையதளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

தற்பொழுது இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. முழுநேரமும் ஒளிபரப்பப்பட்டு வருவதால் பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெறும் அனைத்தும் இப்போது வெட்ட வெளிச்சமாக காட்டப்பட்டு வருகிறது. தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பப்பட்ட  பொழுது எடிட் செய்யப் பட்டு ஒலிபரப்பப்பட்டது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மருத்துவ முத்தம், ஓவியா தற்கொலை முயற்சி, புகைப்பிடிக்கும் காட்சிகள் ஆகியவை தொலைக்காட்சியில் எடிட் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டது கொஞ்சம் சர்ச்சைகள் குறைவாகவே இருந்தது ஆனால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் முழுக்க முழுக்க ஒளிபரப்பப்பட்டு வருவதால் சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அனிதா சம்பத் நிரூப்பை மோசமான வார்த்தைகளில் திட்டும் காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் என்ன இவ்வளவு மோசமாக பேசுகிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஒயல்ட் கார்ட் என்ட்ரியாக பலர் வந்து கொண்டே இருக்கிறார்கள் அதனால் இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது.  அதேபோல் இந்த நிகழ்ச்சியில் இருந்த வனிதா அதிரடியாக வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதோ அனிதா திட்டிய அந்த வீடியோ.

Leave a Comment