சமூக வலைதளம் மிகவும் பிரபலமானதிலிருந்து சிலர் சம்பந்தமே இல்லாமல் திடீரென பிரபலமாகி வருகிறார்கள், சமூக வலைதளத்தில் மீம்ஸ், ட்ரோல், டிக் டாக் என ஒரே நைட்டில் பிரபல மாணவர்களில் ஒருவர் செய்தி வாசிப்பாளர் அனிதா.
சன் தொலைக் காட்சிகளில் இவர் செய்தி வாசிப்பாளராக இருந்தார் அதன் பிறகு நியூஸ்7 தொலைக்காட்சி களில் பணியாற்றி வந்தார், இவரின் பவ்யமான அழகு அனைத்து ரசிகர்களையும் கட்டிப் போட்டு விட்டது. அதேபோல் சினிமாவில் சர்கார் திரைப்படத்தில் செய்தி வாசிப்பாளராக நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார், அதுமட்டுமல்லாமல் இவர் கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இந்தநிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் கடந்த மாதம் திடீரென அவருக்கு திருமணம் நடைபெற்றது. இவரின் திருமண புகைபடங்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது, இதைப்பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்கள் கவலையுடன் மீம்ஸ் கிரியேட் செய்து சமூக வளைதளத்தில் பறக்க விட்டார்கள்.
இந்த நிலையில் தற்பொழுது திருமணத்திற்குப் பிறகு முதல் முதலாக, சன் தொலைக்காட்சியில் செய்தி வாசித்ததாக கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அனிதா, இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன் தாலி எங்கே என்று கேட்டு நச்சரித்து வருகிறார்கள்.
இதற்கு பதிலளித்த அனிதா சம்பத் தாலியை கட்டுவதில்லை மதத்தை அடையாளப்படுத்த விரும்பாமல் அழைத்துக் கொள்வேன் ஆனால் அப்படியே கழற்றிவிடும் அதில் தப்பு ஒன்றும் இல்லை இது என் விருப்பம் என ரிப்ளை செய்துள்ளார்.
