கமலுக்கு புரியும்.. சிம்புவுக்கு புரியாது.? தேவையில்லாத பேச்சை பேசி மாட்டிக்கொள்ளும் அனிதா சம்பத்.! வைரலாகும் வீடியோ.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பெரும்பாலான மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகின்றன. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி எடிட் செய்யப்பட்டு ஒரு மணி நேரம் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த நிலையிலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது அதை தொடர்ந்து தற்போது ஹாட்ஸ்டார் இல் 24 மணி நேரமும் லைவ் ஆக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் நடந்துகொள்ளும் முறை பேசும் விதம் போன்ற அனைத்தும் தெள்ளத் தெளிவாக மக்களுக்கு தெரிய பட்டு வருகின்றன. இதையடுத்து இந்த சீசனில் பல வித்தியாசமான போட்டிகளும் கொடுத்து போட்டியாளர்கள் அனைவரும் விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் கோழி முட்டையை அடைகாக்கும் டாஸ்க் நடைபெற்றுவருகின்றன.

இதில் ரசிகர்கள் பலரின் ஃபேவரட் நாயகனாக இருந்து வரும் பாலா மற்றும் நிரூப் இருவரிடையே இந்த வாரம் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. இதையடுத்து சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி 5  ஐந்து சீசன்களையும் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில்  இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் ஆரம்பத்தில் கமலஹாசன் தொடங்கி வைத்தார்.

எனினும் சில காரணங்களால் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதை அடுத்து பிரபல நடிகர் சிம்பு தற்போது இரண்டு மூன்று வாரங்களாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான அனிதா சம்பத் சமீபத்தில் கூட கெட்ட வார்த்தை பேசிய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. இதையடுத்து தற்போது இவர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் தொகுப்பாளரயே குறை கூறியுள்ளார்.

அனிதா சம்பத் சக போட்டியாளர்கள் இடம் “நம்பலாம் பிக்பாஸ் இதற்குமுன் ஒரு சீசன் கலந்துகொண்டோம் அதனால் நமக்கு இதைப்பற்றி நன்கு புரியும் கமல் சாரும் 5 சீசன் இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்ததால் அவருக்கும் இந்த நிகழ்ச்சி பற்றி அனைத்தும் புரியும் ஆனால் சிம்பு இந்த நிகழ்ச்சிக்கு புதுசு என்பதால் நம்ப பேசும் அர்த்தம் அவருக்கு டீப்பாக புரியாது என கூறியுள்ளார்.

Leave a Comment