பிரபல நடிகையுடன் கைகோர்த்து புதிய படத்தில் நடிக்கும் அனிதாசம்பத் – யார் அது தெரியுமா.? வெளியான புகைப்படம்.

anitha sampath
anitha sampath

சின்னத்திரையில் நம்பர்-1 தொலைக்காட்சியான சன் டிவி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து மக்களின் மனதை கவர்ந்தவர் அனிதா சம்பத் அவர் செய்தி வாசிக்கும் விதம் பலருக்கும் பிடித்துப் போய் அவரை இணையதளத்தில் பலரும் பின் தொடர ஆரம்பித்தனர்.அவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர்.

செய்தி வாசிப்பது தவிர காப்பான் போன்ற ஒரு சில படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தார் இப்படி செம்மையாக ஜொலித்து வந்த இவர்  பின்பு விஜய் டிவி தொலைக்கட்சியில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் அவரது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தாலும் ரசிகர்களை பெரிதும் அவர் கவரவில்லை.

பின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிபி ஜோடிகள் என்னும் நடன நிகழ்ச்சியில் ஷாரிக் என்பவருடன் ஜோடியாக இணைந்து கலந்து கொண்டார்.அந்த நடன நிகழ்ச்சியில் அவரது சிறப்பான நடனத்தின் மூலம் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை பெற்றார்.

அனிதா சம்பத் தனது யூடியூப் பக்கத்தில் அவரது கணவருடன் இணைந்து வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருப்பார். பின்பு தற்பொழுது விஜய் டிவி தொலைக்காட்சியில் டாப் சீரியலில் ஒன்றான பாரதிகண்ணம்மா தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெண்பாவிற்கு பதில் இவர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நேரத்தில்  படவாய்ப்புகளும் சில வந்த வண்ணமே உள்ளன. தற்போது அனிதா சம்பத் தனது இன்ஸ்டா பக்கத்தில் சோனியா அகர்வாலுடன் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு புதிய படமொன்றில் கமிட்டாகி உள்ளதாக தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

anitha sampath
anitha sampath