அஜித் செயலால் அதிர்ந்து போன அனிதா சம்பத்.! என்ன கூறினார் தெரியுமா.?

Ajith : சினிமாவில் எப்படி நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் உள்ளனரோ ஒரு அதுபோல சின்னத்திரையில் பணியாற்றி வரும் தொகுப்பாளர்களுக்கும் ரசிகர்கள் இருந்து வருகின்றன அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிவரும் அனிதா சம்பத் அவர்களையும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் பின்தொடர்ந்து வருகிறது.

செய்தி வாசிப்பாளராக தனது சிறந்த திறமையை வெளிக்காட்டி வரும் அனிதா சம்பத் அவர்கள் அவ்வபொழுது சினிமா திரைப்படங்களிலும் செய்தி வாசிப்பாளராக நடித்துவருகிறார் அந்தவகையில் சர்க்கார், காப்பான் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்துஅவர் எமர்ஜென்சி என்ற வேப் சீரியலில் நடித்து வருகிறார்.

கொரோனா என்ற ஒற்றைச் சொல் உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது இந்த நிலையில் தற்பொழுது இந்தியாவிலும் அதன் தாக்கமும் அதிகமாக இருப்பதால் இந்தியா முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது இத்தடை ஏப்ரல் 14 வரை நீடிக்கும் என அரசு அறிவித்துள்ளது இதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

தமிழக அரசின் வேண்டுகோளுக்கிணங்க தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு முதலமைச்சர் தெரிவித்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தல அஜித் அவர்கள் 1.25 கோடியை நிதியுதவி கொடுத்துள்ளார் இதனை பார்த்த அவரது ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர் மட்டுமில்லாமல் தமிழக அமைச்சர்கள் மற்றும் முன்னணி பிரபலங்கள் பலர் அஜித்தை வாழ்த்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அனிதா சம்பத் அவர்கள் அஜித்தை பற்றி சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியது1.25 கோடி அம்மோவ் தல தல தான் என புகழ்ந்துள்ளார்.

https://twitter.com/anithasampath_/status/1247504687923736576

Leave a Comment