விஜயுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ள அனிதா சம்பத் அதுவும் எந்த சீனில் வருவார் தெரியுமா.!

0

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர் இந்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வருகிறது மேலும் மாஸ்டர் திரைப்படத்தை பார்த்த சினிமா பிரபலங்கள் பலரும் விஜய்க்கு பாராட்டுகளை தெரிவித்து வருவது மட்டுமல்லாமல் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வசூலில் அதிகம் வசூல் அளிக்கும் எனவும் பதிவு செய்து வருகிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் நிறைய பிரபலங்கள் நடித்துள்ளார்கள் அதில் ஒரு பிரபலம் தான் அனிதா சம்பத் இவர் சின்னத்திரையில் முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்த பின்பு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த சர்க்கார் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதனையடுத்து இவர் சமீபத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றதன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கினார்.ஆனால் அண்மையில் இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

மேலும் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்திலும் இவர் ஓபனிங் சீனில் நடித்துள்ளார்.

இதனையடுத்து இவர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் இவரது ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரலாகி வருகிறது.

Anithasampath
Anithasampath