சின்னத்திரையில் நம்பர் ஒன் தொலைக்காட்சியான சன் டிவி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வலம் வந்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர் அனிதா சம்பத். இவரது செய்தி வாசிக்கும் அழகுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உருவாகின. பின்பு பல ரசிகர்களும் அவரை சமுக வலைதளங்களில் பின்பற்ற தொடங்கினர்.
பின்பு அனிதா சம்பத் காப்பான் போன்ற ஒரு சில படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தார். இதன் மூலம் பாப்புலரான அனிதா சம்பத்க்கு விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிகழ்ச்சியிலும் தனது திறமையை பெருமளவு வெளிப்படுத்தினால் சினிமாவில் ஒரு நீங்கா இடம் கிடைக்கும் என எதிர்பார்த்த அனிதா சம்பத் ஆனால் இந்த நிகழ்ச்சியில் அவர் நடந்து கொண்ட விதம் மக்கள் பலருக்கும் பிடிக்காமல் போனது அதனால் அவர் பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆனது. பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் பிக் பாஸ் ஜோடிகள் என்னும் நடன நிகழ்ச்சியில் ஷாரிக் உடன் இணைந்து ஜோடியாக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அவரது நடன திறமையின் மூலம் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை பெற்றார். தற்போது இவருக்கு வெள்ளித்திரையில் தொடர்ந்து வாய்ப்புகள் வந்த வண்ணமே உள்ளன. சமீபத்தில் கூட சோனியா அகர்வாலுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தீயாய் பரவியது .

தற்போது வெளிவந்த தகவல் என்னவென்றால் நடிகை மீனா மற்றும் சத்யராஜுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பதிவிட்டு இவர்களுடன் இணைந்து படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது லிக்குகளை குவித்து வருகிறது.
