இதோ அனிருத்தே சொல்லிவிட்டாரே அப்புறம் என்ன.! போடுடா வெடியா.!

காதலர் தினத்தன்று மாஸ்டர் படத்தில் முதல் சிங்கிள் ட்ரேக் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் மேடையில் விஜய் அவர்கள் குட்டி கதை சொல்வாரா அல்லது சொல்ல மாட்டாரா என எதிர்பார்த்து வந்தனர் இந்த நிலையில் படத்தின் இசையமைப்பாளரான அனிருத் அவர்கள் இசை வெளியீட்டு விழாவில் கண்டிப்பாக குட்டி கத சிங்கிள் ட்ராக் உள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். அதேபோன்று முதல் சிங்கிள் பாடல் யார் பாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ரசிகர்கள் கண்டிப்பாக விஜய் அவர்கள் பாடுவார் என தெரிவித்து வருகின்றனர்.

இதுபோன்று விஜய் கடந்த சில படங்களாக மேடைகளில் அவரது படத்தினை பற்றி பேசுவார். இப்போது அரசியலை பற்றி அல்லது வருமான வரித்துறை பற்றி பேசுவாரா என மக்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

மாஸ்டர் படத்தின் புரமோஷன் வேலைகளில் மிக தீவிரமாக இறங்கியுள்ளது தயாரிப்பு நிறுவனம். லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கத்தில் மாஸ்டர் படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என முன்னணி பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஏனென்றால் இதற்கு முன்பு அவர் கைதி படத்தில் பாடல்கள் மாற்றும் ஹீரோயின் இல்லாமலேயே மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து. மாஸ்டர் படத்தில் எல்லாம் உள்ளதால் இது மிகப்பெரிய வெற்றிப் படமாக உருமாறும் என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Comment