அனிருத் பிறந்த நாள் பார்ட்டியில் அவருடன் மிகவும் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக் கொண்ட கீர்த்தி சுரேஷ்.! வைரலாகும் புகைப்படம்

0

Keerthi suresh : இசையமைப்பாளர் அனிருத் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் இவர் முதன்முதலில் தனுஷ் நடிப்பில் வெளியாகிய மூன்று என்ற திரைப்படத்தின் மூலம் தனது இசையை வெளிப்படுத்தி மிகவும் பிரபலம் அடைந்தார்.

இந்த ஒரு திரைப்படத்தின் மூலமாக அனிருத்தின் இசை மிகவும் பிரபலமடைந்தது அதுமட்டுமில்லாமல் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய எதிர்நீச்சல் தளபதி விஜயின் கத்தி, அஜித்தின் வேதாளம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பேட்ட என பல திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

இந்த நிலையில் அனிருத் தற்போது விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்திற்கும் இசை அமைத்துள்ளார்.

அனிருத் அவர்களுக்கு நேற்று பிறந்த நாள் அதனால் இரவு பார்ட்டியில் பல நட்சத்திர பிரபலங்களும் கலந்து கொண்டார்கள் அதில் ஒருவர் கீர்த்தி சுரேஷ், கீர்த்தி சுரேஷ் அனிருத்துடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.