சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்க முடியாது.? ரசிகர்களின் தலையில் குண்டை தூக்கிப்போட்ட அனிருத்.. பின்னணியில் இதுதான் காரணமா.?

anirudh
anirudh

தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களில் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு தற்பொழுது நிறைய ஹிட் திரைப்படங்களை கொடுத்து வரும் நடிகர்களில் ஒருவர்தான் சிவகார்த்திகேயன் இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே.

அதன் பின்பு ஒரு சில துணை கதாபாத்திரங்களில் நடித்து ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்து அவ்வாறு இவர் கதாநாயகனாக பல திரைப்படங்கள் நடித்து விட்டார் மேலும் இவரது திரைப்படங்களுக்கு இவர் அதிகமாகவும் சம்பளம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது. இவரைப் போலவே தமிழ் சினிமாவில் நிறைய ஹிட் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருபவர்தான் அனிருத்  இவர் சிவகார்த்திகேயனின் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து கொடுத்துள்ளார்.

தற்பொழுது இவர்களுக்கு இடையில் ஒரு மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது அதாவது சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க பேச்சுவார்த்தை நடந்திருக்கிறதாம் ஆனால் அப்பொழுது அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க மறுப்பு தெரிவித்ததாக சினிமா வட்டாரங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என இந்த தகவல் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி  வருகிறது.

எதற்காக அனிருத் சிவகார்த்திகேயன் திரைப்படத்திற்கு மறுப்பு சொல்கிறார் என்று கேட்டால் அனிருத் தற்பொழுது ஜெயிலர்,இந்தியன் 2,லியோ போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருவதால் சிவகார்த்திகேயனின் இந்த திரைப்படத்திற்கு அவரால் இசையமைக்க முடியாமல் போய்விட்டதாம்.

anirudh
anirudh

மேலும் இந்த படத்தில் நான் இசையமைக்க விரும்புவதாகும் ஆனால் இப்பொழுது சந்தர்ப்ப சூழ்நிலை சரியில்லை நான் பல திரைப்படங்களில் வாக்கு கொடுத்துவிட்டேன் என்னால் இப்பொழுது இந்த திரைப்படத்தில் இசையமைக்க முடியவில்லை என அனிருத் கூறியதாகவும் இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.