ரஜினி படத்திற்கு இசையமைக்க மறுத்த அனிருத் – எதனால் தெரியுமா.?

0
rajini-
rajini-

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக பார்க்கப்படுபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் இதுவரை 168 திரைப்படங்களில் நடித்திருக்கிறார் இப்பொழுதும் நடித்துக் கொண்டுதான் ஓடுகிறார் அந்த வகையில் தனது 169 திரைப்படமான ஜெயிலர் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் .

இந்த படத்தை இளம் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் தனக்கே உரிய ஸ்டைலில் எடுக்கிறார். மிகபிரம்மாண்டமான பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை எடுத்து வருகிறது. ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் முக்கிய பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.

ஜெயிலர் படத்தில் ரஜினி வயதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அவருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி, கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், யோகி பாபு மற்றும் பல நடிகர், நடிகைகள் நடித்து உள்ளனர். இந்த படத்தை ரஜினி வெற்றிகரமாக முடித்துவிட்டு அடுத்ததாக லைகா நிறுவனத்துடன் கைகோர்த்து ரஜினி இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறார்.

அதில் ஒரு படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தில் ரஜினி ஹீரோ கிடையாது ஆனால் 20 நிமிட காட்சியில் வந்து போவார் என சொல்லப்படுகிறது இந்த படத்திற்கு லால் சலாம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினி படத்திற்கு தொடர்ந்து அனிருத் இசை அமைத்த வந்த நிலையில் இந்த படத்திற்கும்  அனிருத் தான்  வழக்கம்போல இசையமைப்பாளர்  என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக ஏ ஆர் ரகுமானை படக்குழு தேர்வு செய்துள்ளது. அதற்கு காரணம் அனிருத் முன்பை விட அதிக சம்பளம் கேட்டதால்  இந்த படத்தில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.