பட்ட ஜிலேபி நடிகையை திருமணம் செய்ய போகும் இசையமைப்பாளர் அனிருத்.? ஒல்லியாய் பல்லி மாதிரி இருந்துகிட்டு இந்த முன்னணி நடிகை கேக்குதா என கலாய்க்கும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ் அவர்கள் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற 3 என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத். இவர் அறிமுகமான முதல் படவே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக டேவிட், வணக்கம் சென்னை, உள்ளிட்ட சில திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்தார்.

இவர் இசையமைக்கும் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் பெறவே அடுத்தடுத்து முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித், கமல், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்து கொடுத்தார். இதனை தொடர்ந்து தற்போது லியோ மற்றும் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து இன்னும் அடுத்தடுத்த படங்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி முன்னணி இசையமைப்பாளராக மாறிய அனிருத் சில முன்னணி நடிகைகளுடன் காதல் கிசுகிசுவில் சிக்கி உள்ளார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த நிலையில் தற்போது இசையமைப்பாளர் அனிருத் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையை திருமணம் செய்யப் போகிறார் என்று ஒரு வதந்தியாக தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

முதலில் நடிகை ஆண்ட்ரியாவை அனிருத் காதலித்து வந்தார் அது மட்டுமல்லாமல் இவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அதன் பிறகு சில நடிகைகளுடன் இரவு பார்ட்டியில் கலந்து கொண்ட அனிருத் அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது மட்டுமல்லாமல் அந்த நடிகைகளுடன் அனிருத் கிசுகிசுக்கபட்டார்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் இருவரும் இரவு நேரத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி இருந்தார்கள். அது மட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று சில வதந்தியான செய்திகள் வெளியானது.

ஆனால் இவர்கள் தரப்பில் இருந்து நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என்று கூறியிருந்தார்கள். இந்த நிலையில் அனிருத் அவர்களின் வீட்டார் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெண் தேடி வருவதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்தப் பெண் தேடலில் நடிகை கீர்த்தி சுரேஷின் பெயரும் அடிபட்டு வருவதாக சில வதந்தி தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment