புதியதாக கிடைத்த ஜாக்பாட்டால் தமிழ் சினிமாவில் இருந்து நழுவும் அனிருத்.! டாப் நடிகர்கள் கதறல்.?

தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான நாட்களில் இருந்து தற்போது வரையிலும் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் படங்களில் இசையமைத்து வெற்றியை மட்டுமே கண்டு வருபவர் அனிருத். இவரது அப்பா முன்னணி சினிமா நடிராகயாக இருந்தாலும் அதனை பெரிதாக பயன்படுத்திக் கொள்ளாமல் தனது இசையை நம்பியே களத்தில் குதித்தார்.

ஆரம்பத்திலேயே நடிகரின் படங்களில் இசையமைப்பு ஒன்றும் அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல அதற்கு அபார திறமை வேண்டும் அது மட்டுமில்லாமல் வேறு படத்தில் எடுக்கப்பட்ட இசையை இதில் எடுத்தால் அதை மக்கள் எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள்.

காரணம் அந்த அளவிற்கு டாப் நடிகர்களுக்கு ரசிகர்கள் இருப்பதால் எப்படியாவது தேடி எடுத்து விடுவார்கள் என்பதால் புதிதாக ஒன்றை யோசித்து அதை நல்ல முறையில் கொடுக்க இசை அமைப்பார்கள் படாத பாடு படுவார்கள் ஆனால் இந்த இளம் வயதிலேயே பல ஜாம்பவான்களுக்கு இசை அமைத்து தன்னை திரை உலகில் நிலைநிறுத்திக் கொண்டார் அனிருத் அதற்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள்.

தமிழ் சினிமாவில் ரஜினி, அஜித், விஜய், கமல், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்பட பல்வேறு நடிகர்களுக்கு இசையமைத்து உள்ளார். தற்போதும் கூட தளபதி 65, இந்தியன் 2 போன்ற படங்களில் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் தான் அனிருத் அவர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது.

அது என்னவென்றால் அனிருத் பாலிவுட் டாப் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கும் ஆனந்த் ராய் இயக்கும் ஒரு புதிய படத்தில் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் அவர் முதன்முறையாக பாலிவுட் சினிமாவில் இசையமைக்கவுள்ளார். இதனால் சினிமா பிரபலங்கள் பலரும் தற்போது அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.