கமிட்டான பிறகு இயக்குனர்களை இழுக்கடிக்கும் அனிருத்..! எல்லாத்துக்கும் காரணம் இதுதான்..!

aniruth-2
aniruth-2

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் அனிருத் இவர் இளம் வயதிலேயே இப்படி ஒரு சாதனை படைத்தது பலரையும் வியக்க வைத்தது என்றே சொல்லலாம் அந்த வகையில் தற்போது முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் இவர் தான் இசை அமைப்பாளராக இருந்து வருகிறார்.

அந்த வகையில் நமது இசையமைப்பாளர் திரைப்படங்களில் இசை அமைப்பது மட்டுமில்லாமல் பல பாடல்களையும் பாடி மிகப்பெரிய வரவேற்பை பெற்று உள்ளார் மேலும் சமீபத்தில் நெல்சன் இயக்கும் 169 திரை படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளாராம்.  மேலும் நிற்க கூட நேரம் இல்லாத அளவிற்கு திரை உலகில் கொடி கட்டிப் பறந்து வரும் நமது அனிருத் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

ஒருபக்கம் இவருடைய வெற்றியை பலரும் கொண்டாடி வந்தாலும் மறுபக்கம் இவர் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்து கொண்டே தான் இருக்கிறது அந்த வகையில் இவர் டீஸ்ட் திரைப்படத்தில் வேறு ஒரு திரைப்படத்தின் இசையை காப்பியடித்து உள்ளதாக தெரியவந்தது இவ்வாறு நடந்த செயலை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தன்னுடைய பெயரை தானே எடுத்துக்கொள்கிறார் என பலர் விமர்சனம் செய்து வந்தார்கள்.

அதுமட்டுமில்லாமல் ஏதாவது ஒரு திரைப்படத்தில் இவர் கமிட் ஆனால் போதும் அந்த திரைப்படத்தை எந்த அளவுக்கு இழுத்தடிக்க முடியுமோ அந்த அளவிற்கு இழுத்தடித்து வருகிறார் என இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் கூறுவது மட்டுமில்லாமல் தற்போது ஒரே நேரத்தில் திரைப் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர்கள் அவதிப்படுகிறார்கள். இப்படியெல்லாம் அனிருத் செய்வது ஏனென்றால் உடனே முடித்துக் கொடுத்தால் தன்னுடைய கெத்து போய் விடும் என்ற காரணத்தினால் தான்.

aniruth-2
aniruth-2

அதுமட்டுமில்லாமல் விரைவாக செய்ய வேண்டும் என்றால் இசையில் எந்த ஒரு மாற்றமும் மறுபடி கொடுக்க முடியாது என அனிருத் கட்டளையிட்டதன் காரணமாக பல்வேறு இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் வேறு ஒரு இசையமைப்பாளரை தேடி படை எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் இதனால் அனிருத்துக்கு பட வாய்ப்பு குறைந்த கொண்டே இருக்கிறது.