மாளவிகாவுக்கு போன் பண்ணி பீல் பண்ணிய அனிருத்.! தலைவன் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.

நடிகை மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் முதன் முதலாக ரஜினி நடித்து வெளியாகிய பேட்ட திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர். அதாவது பேட்ட திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு மனைவியாக நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.

இதனைத்தொடர்ந்து அடுத்ததாக தனுசுடன் மாறன் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இப்படி அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்து வருவதால் மாளவிகா மோகனன் மார்க்கெட் எகிறிக் கொண்டே போகிறது இந்த நிலையில் இவர் படங்களில் நடிக்கும்போது கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மாறன் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருப்பது மட்டுமல்லாமல் கொஞ்சம் கவர்ச்சியாகவும் நடித்து இருந்தார் மாடர்ன் பெண்ணாக நடித்த மாளவிகா மோகனன் ரசிகர்கள் மனதில் விரைவில் இடம் பிடித்து விட்டார். மாறன் திரைப்படம் நேரடியாக OTT இணையதளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

தனுஷ் எப்படி இந்த கதையை தேர்வு செய்தார் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் கார்த்திக் நரேன் தனுசை வைத்து செஞ்சிவிட்டார் எனவும் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் மாளவிகா மோகனன் பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபல நடிகருடன் இணைந்து நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

அப்படி இருக்கும் வகையில் இசையமைப்பாளர் அனிருத் மாளவிகா மோகனன் இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வருகிறார்கள். மாளவிகா மோகனன் விஜயுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது லாக்டவுன் விழுந்தது அப்பொழுது அணிருத் அவர்கள் மாளவிகா மோகனனுக்கு கால் செய்து இப்படி ஆயிடுச்சே எல்லாம் சீக்கிரம் சரியாகிவிடும் பழையபடி வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான். என பீல் பண்ணி அனிரூத் பேசியதாக மாளவிகா மோகனன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Leave a Comment

Exit mobile version