அனிருத் முதல் ஜிவி பிரகாஷ் வரை அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்கள் யார் யார் தெரியுமா.? அதுவும் கோடியில் சம்பளமா.?

தமிழ் சினிமாவில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் இருந்தாலும் அதிகமாக சம்பளம் வாங்கும் டாப் 5 இசையமைப்பாளர்கள் யார் யார் என்பதையும் அவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதைபற்றியும் இங்கே காணலாம். இன்றைய காலகட்டத்தில் இசை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் பிடித்த ஒன்றாக மாறிவிட்டது இசை இல்லாமல் ஒரு மனிதர் ஒரு நாளை கடந்து செல்ல முடியாது.

மனிதர்களின் உணர்வோடு ஒன்றிணைந்து படங்களின் மூலம் நமக்கு பரிசாக தருபவர்கள் தான் இசையமைப்பாளர்கள். அப்படிப்பட்ட இசையமைப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு என்பதை இங்கே காணலாம். அந்த வகையில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களின் லிஸ்டில் முதல் ஆளாக இருப்பது அனிருத் தான்.

அனிருத் ஏ ஆர் ரகுமான் அவர்களிடம் இசை பயிற்சி பெற்றவர்தான் ஆனால் இன்று குருவை மிஞ்சிய சிசியனாக வளர்ந்து நிற்கிறார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் இசையமைப்பாளர் லிஸ்டில் இருப்பவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் அஜித் விஜய், ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களின் படங்களை கையில் வைத்திருக்கும் அனிருத் ஒரு திரைப்படத்திற்கு இசையமைப்பதற்கு பத்து கோடி வரை சம்பளமாக வாங்குகிறாராம்.

ஏ ஆர் ரகுமான் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் இசை உலகில் முன்னணி இசையமைப்பாளராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ஏ ஆர் ரகுமான் இசைஞானி இளையராஜாவிற்கு அடுத்தபடியாக நீண்ட காலம் இசையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் ரோஜா திரைப்படத்தில் தொடங்கி இன்று உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படம் வரை செல்வ செழிப்போடு சென்று கொண்டிருக்கிறார் ஏ ஆர் ரகுமான். தமிழைத் தாண்டி மலையாளம் ஹிந்தி, தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் டஜன் கணக்கில் படங்களை கையில் வைத்துள்ளார்.

இசை புயல் ஏ ஆர் ரகுமான் ஒரு திரைப்படத்திற்கு எட்டு கோடி வரை சம்பளமாக வாங்குகிறாராம். மூன்றாவது இடத்தில் இசையமைப்பாளர் தமன் இருக்கிறார். முன்னணி இசையமைப்பாளர் லிஸ்டில் இடம் பெற்றிருக்கும் தமன் தெலுங்கில் தான் அதிக திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் தெலுங்கில் அதிக ஹிட் திரைப்படங்களில் இசையமைத்துள்ள தமன் கடைசியாக தமிழில் விஜயின் வாரிசு திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் தற்பொழுது ஷங்கர் இயக்கத்தில் உருவாக்கி வரும் கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தில் இசையமைத்து வருகிறார் தமன் ஒரு திரைப்படத்திற்கு 7 கோடி வரை சம்பளமாக வாங்குகிறாராம். நான்காவது இடத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இடம் பிடித்துள்ளார்.

இளையராஜாவின் மகனான யுவன் சங்கர் ராஜா தன்னுடைய தனித்துவமான இசையால் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளார் இவர் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேல் பல்வேறு வெற்றி பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் இசை ராஜாவாக வலம் வரும் யுவன் சங்கர் ராஜா தற்பொழுது விஜயின் 68வது திரைப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் உடன் மீண்டும் கூட்டணி அமைக்கிறார் யுவன் சங்கர் ராஜா இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா 5 கோடி வரை சம்பளமாக வாங்குகிறாராம்.

ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளவர் ஜிவி பிரகாஷ் குமார். ஏ ஆர் ரகுமானிடம் இசை பயிற்சி பெற்ற இசையமைப்பாளர்களில்  ஜிவி பிரகாஷ் குமார் அவர்களும் ஏ ஆர் ரகுமான் அவர்களிடம் இசை பயிற்சி பெற்றவர் சிறுவயதிலிருந்தே இசையின் மீது உள்ள ஆர்வத்தினால் இசையமைப்பாளராக தேர்ந்து வருகிறார் மனதை வருடும் பாடல்கள் கொடுப்பதில் கில்லாடி ஜிவி பிரகாஷ் குமார் தற்பொழுது ஹீரோவாகவும் நடித்து வருகிறார் இவர் தற்பொழுது சூர்யாவின் வாடிவாசல் தனுஷின் கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார் இவர் ஒரு திரைப்படத்திற்கு மூன்று கோடி வரை சம்பளமாக வாங்குகிறார்.

Leave a Comment