அனிகா சுரேந்திரன் நடிக்கும் திரைப்படத்தில் இணைந்த பிரபல நடிகை.!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பிறகு நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஹிப் ஹாப் ஆதி. இவருடைய நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் தற்போது இவருடைய நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் திரைப்படத்தினை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தில் நடிகர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக அஜித் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான அனிகா சுரேந்திரன் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அனிகா சுரேந்திரன் அஜித் மற்றும் திரிஷா கூட்டணி வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனை அடுத்து மீண்டும் அஜித்துடன் இணைந்து விசுவாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார் இவ்வாறு அஜித்தின் ரீல் மகளாக தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தார்.

மேலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா தற்பொழுது வளர்ந்து முன்னணி நடிகைகள் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இதன் மூலம் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ள நிலையில் சமீப காலங்களாக திரைப்படங்களிலும் நடித்த வருகிறார் என்ற தகவல் வெளியாகிய உள்ளது.

அந்த வகையில் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தற்பொழுது கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் ஆரம்ப கட்ட பணிகள் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெளியாகி உள்ள தகவலின் படி இந்த படத்தில் நடிகை காஷ்மீரா இணைந்து நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது எனவே இது குறித்து வீடியோவை வேல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது எனவே அந்த வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ஹிப் ஹாப் ஆதியின் 7வது திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் அவரே ஹீரோவாக நடித்து இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாதேஷ் மாணிக்கம் ஒழிப்பதிவில் பிரசன்னா படத்தொகுப்பில் இந்த படம் உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment