இதற்காகத்தான் முத்த காட்சியில் நடித்தேன்.. என முத்தம் குறித்த விமர்சனத்திற்கு பதில் கூறிய அனிகா சுரேந்திரன்.!

சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்பொழுது முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வருபவர்தான் நடிகை அனிகா சுரேந்திரன், இவர் தற்பொழுது “ஓ மை டார்லிங்” என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில்,இந்த படத்தில் லிப்லாக் காட்சியிலும் நடித்துள்ளார் எனவே இந்த காட்சி குறித்த விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்பொழுது அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

பேபி அனிகா குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமாகி சில திரைப்படங்களில் நடித்து வந்தார் அதன் பிறகு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்தின் மகளாக விசுவாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

anika
anika

இவ்வாறு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவருக்கு தற்பொழுது 18 வயது கூட முடியவில்லை ஆனால் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் புத்தபொம்மை என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக ஹீரோயின் ஆக அறிமுகமானார் இந்த படம் தெலுங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது இந்த படம் கப்பேலா எனும் மலையாளத் திரைப்படத்தில் இருந்து தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது.

anika 2
anika 2

இவ்வாறு இந்த படத்தினை அடுத்து, அடுத்தடுத்து ஹீரோயினாக நடிப்பதற்கான வாய்ப்பை அனிகா கைப்பற்றி வரும் நிலையில் தற்பொழுது ‘ஓ மை டார்லிங்’ என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் இந்த படத்தினை ஆல்ஃப்ரெட்டி சாமுவேல் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலான நிலையில் அதில் அனிகா ஏராளமான லிப் லாக் காட்சியில் நடித்துள்ளார் என்பது தெரிய வந்தது.

anika 1
anika 1

இப்படிப்பட்ட நிலையில் லிப் லாக் காட்சியில் நடித்தது குறித்து அனிகா சுரேந்திரன் விளக்கம் அளித்துள்ளார், அதாவது ஓ மை டார்லிங் முழுநீள காதல் படம் அதில் முத்தக் காட்சி இடம் பெறுவதை தவிர்க்க முடியாத ஒன்று.. கதை சொல்லும் போதே இந்த காட்சிக்கான முக்கியத்துவத்தையும் இயக்குனர் சொல்லி இருந்தார். கதைக்கு தேவைப்பட்டதால் தான் அதில் நடித்தேன் அந்த காட்சியில் துளி அளவு கூட ஆபாசம் இருக்காது படம் பார்க்கும் பொழுது ரசிகர்களுக்கு அது புரியும் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment