குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து தற்பொழுது இணையத்தை அலற விட்டு வரும் குழந்தை நட்சத்திரம் தான் அனிகா சுரேந்திரன் இவர் கடந்த 2015ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் தல அஜித்திற்கு மகளாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் என்னை அறிந்தால் திரைப்படத்தை தொடர்ந்து இவர் மீண்டும் தல அஜித்துடன் கை கோர்த்து நடித்தார்.
இவர் மீண்டும் தல அஜித்துடன் விஸ்வாசம் திரைப்படத்தில் மகளாக நடித்தது மக்கள் மத்தியில் இவர் மேல் நல்ல மரியாதை வந்தது ஆனால் இவர் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் சிறு வயதிலேயே கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துவிட்டார்.
ஆம் இவர் நிறைய திரைப்பட வாய்ப்புகளை கைப்பற்ற வேண்டும் என கடந்த சில வருடங்களாகவே மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் மிருதன் திரைப்படத்தில் இவர் ஜெயம் ரவியின் தங்கையாகவும் நடித்து உள்ளார் இவ்வாறு தமிழில் புகழ்பெற்று விளங்கிய அணிகா சமீபகாலமாக மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறாராம்.

அதை தவிர்த்து பார்த்தால் விளம்பர படங்களிலும் நடித்து நிறைய ரசிகர் வட்டத்தை சேர்த்து வருகிறார் சமீபகாலமாகவே இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை அழகாக வர்ணித்து கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.
அதேபோல் நேற்று தீபாவளியை முன்னிட்டு பல பிரபலங்களும் தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்தார்கள் அதே போல் இவரும் தற்பொழுது தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.ஆம் இந்த புகைப்படங்களில் அனிகா பார்ப்பதற்கு அழகாக தெரிவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்,ஷேர் போன்றதை செய்து வருகிறார்கள்.