வசந்தபாலன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் அங்காடித்தெரு இந்த திரைப்படத்தில் மகேஷ் மற்றும் அஞ்சலி நடித்திருந்தார்கள், நடித்திருந்தார்கள் என்பதைவிட கதாபாத்திரமாகவே வாழ்ந்தார்கள் என்றுதான் கூற வேண்டும், கருணாமூர்த்தி மற்றும் அருண் பாண்டியன் ஆகியோர் தயாரித்த இந்த திரைப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் தான் வெளியிட்டது.
இந்த திரைப்படம் அஞ்சலிக்கும் மகேஷ்க்கும் திருப்பு முனையாக அமைந்த திரைப்படம், இவர்களின் நடிப்பை பார்த்து அனைவரும் வியந்தார்கள், மேலும் இந்த படத்தில் நடித்த மகேஷ் சில திரைப் படங்களில் நடித்தாலும் அவருக்கு எந்தத் திரைப்படமும் கைகொடுக்கவில்லை. அதனால் மகேஷ் சமீபகாலமாக எந்த திரைப்படத்திலும் கமிட் ஆகாமல் இருந்து வந்தார்.
ஆனால் தற்பொழுது அவருக்கு வித்தியாசமான கதை கிடைத்துள்ளது அதனால் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார், மகேஷ் இந்த திரைப்படத்தில் பெண் கெட்டப்பில் நடிக்கிறார், இதன் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது. படத்திற்கு ‘தேனாம்பேட்டை மகேஷ்’ என பெயர் வைத்துள்ளார்கள்.
சினிமாவில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்த திரைப்படத்தில் மகேஷ் திருநங்கையாக சர்வராகவும் நடிக்கிறார், இந்த திரைப்படமாவது மகேஷுக்கு கை கொடுக்குமா என்று பொருத்திருந்து பார்க்கலாம்.
