அங்காடித் தெரு பட நடிகைக்கு புற்றுநோய்!! பண உதவி கேட்டு உருக்கம்.

0

angaitheru actress: வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அங்காடித்தெரு. இந்த திரைப்படத்தில் மகேஷ், அஞ்சலி, வெங்கடேஷ், பிளாக் பாண்டி மற்றும் இவர்களுடன் சிந்து என்கினற  நடிகை இணைந்து நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்குப் பிறகு சில படங்களில் நடித்து விட்டு அதன்பிறகு சீரியலில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

தற்போது அவருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக பிளாக் பாண்டி அவர்கள் ஒரு செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் நடிகை சிந்து அவர்கள் கூறுகையில் தான் நன்றாக இருந்ததாகவும் கொரோனா காலத்தில் அனைவருக்கும் உதவியதாகவும் கூறியிருந்தார். அதன் பிறகு அவருக்கு புற்றுநோய் தீவிரமனதால் அவர் கடன் வாங்கி ஆபரேஷன் செய்து அந்த கட்டியை எடுத்துள்ளாராம்.

அதன்பிறகு இன்ஜெக்ஷன் போடுவதற்கு கூட காசு இல்லையாம். ஒரு இன்ஜக்ஷன் போட 9,500 ரூபாய் ஆகிறதாம். இவருக்கு இன்னும் மார்பகத்தில் ஐந்து சதவிகித புற்றுநோயும் ஸ்பைனல் கர்ட்டிலும் புற்று நோய் பாதித்து உள்ளது எனவே சிகிச்சைக்கு பணம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறாராம்.

மேலும் இவருக்கு நடிகர் கார்த்தி, சாய் தீனா, ரோபோ ஷங்கர், டேனியல், தீபா, சௌந்தர் போன்றவர்கள் ஏற்கனவே இவருக்கு உதவி செய்துள்ளதாகவும் கூறியிருக்கிறார். மேலும் இவருக்கு மருத்துவ செலவுக்கு பணம் உதவி வேண்டும் எனக் கூறியுள்ளார்.

sindhu
sindhu