அங்காடி தெரு நடிகருக்கா இந்த நிலைமை.! எல்லாமே போச்சே என புலம்பும் நடிகர்

தமிழ் சினிமாவில் ஒரு வருடத்திற்கு பல திரைப்படங்கள் வெளியாகின்றன அதேபோல் ஒவ்வொரு நாளும் படத்தின் ரிலீஸ்  அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இந்த நிலையில் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம்தான் அங்காடிதெரு இந்த திரைப்படம் 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகியது குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியைத் தழுவியது.

மேலும் இந்த திரைப்படத்தில் மகேஷ், அஞ்சலி, வெங்கட், சினேகா என பலரும் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படத்தை வசந்தபாலன் இயக்கி ஐயங்கார் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் வெளியிட்டது. இந்த திரைப்படத்திற்கு பிறகு அஞ்சலி தமிழ், தெலுங்கு என மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் ஆனால் படத்தில் நடித்த கதாநாயகன் மகேஷ் என்னவானார் என்பது இதுவரைக்கும் யாருக்கும் தெரியாத தகவலாக இருந்தது.

இந்த திரைப்படத்தில் நடித்த மகேஷ் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கை குறித்து பேசி அனைவரையும் சங்கடத்திற்கு ஆளாகினர். அவர் கூறியதாவது தன்னைத் தேடி வந்த பல நல்ல கதைகளை மிஸ் செய்து விட்டேன் அதர்வா நடித்த ஈட்டி படத்தில் நடிக்க என்னை கேட்டாங்க ஆனா நான் மிஸ் பண்ணிட்டான்.

angadi theru

அதேபோல் சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரம் எனக்கு தான் வந்தது அதன் பிறகுதான் மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதையும் தவறவிட்டேன் இதுபோல் பல நல்ல வெற்றித் திரைப்படங்களை மிஸ் செய்து விட்டேன்.

angadi theru

அதேபோல் நான் தேர்வு செய்த நடித்த எந்த திரைப்படமும் சரியான வெற்றியை கொடுக்கவில்லை என்று மகேஷ் அவர்கள் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தார் அங்காடித்தெரு திரைப்படத்திற்கு பிறகு சினிமாவில் நிலைத்து நிற்க என்ன செய்ய வேண்டும் என்பது எப்படி கதையை தேர்வு செய்ய வேண்டும் என்பதை யாரும் எனக்கு எடுத்துக் கூறவில்லை என வருத்தத்துடன் கூறினார்.

anadi theru

Leave a Comment

Exit mobile version