பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்வதா.? ஆண்ட்ரியா ஆவேச பேச்சு.!

0
andria
andria

தமிழ் சினிமாவில் பாடகியாகவும் நடிகையாகவும் வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா இவர் தமிழ் சினிமாவில் நடித்து வரும் பல திரைப்படங்கள் துணிச்சலான கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இவர் முதன்முதலாக தமிழில்  கண்டநாள் முதல் என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து 2007ஆம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் கல்யாணி வெங்கடேஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படி தொடர்ந்து நடித்து வந்த ஆன்ட்ரியா 2010ஆம் ஆண்டு ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவர் நடிப்பில் வெளியாகி வடச்சென்னை, ஆயிரத்தில் ஒருவன், தரமணி, விஸ்வரூபம் 1&2 மாஸ்டர் என பல திரைப் படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.

நல்ல கதை உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் ஆண்ட்ரியா இன்னும் சினிமாவில் நீடித்து நிலைத்து வருகிறார் இந்த நிலையில் தற்போது இயக்குனர் மிஸ்கின் இயக்கும் பிசாசு இரண்டாவது பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வரும் ஆண்ட்ரியா மீ டூ விவகாரம் குறித்து சில வருடங்களுக்கு முன்பு அதிரடியாக பேசினார்.

அதில் அவர் கூறியதாவது எனக்கு ஒரு ஆண் நபரை பிடித்து இருந்தால் அவருக்கும் என்னைப் பிடித்து இருந்தால் நாங்கள் டேட்டிங்  செய்யப் போகிறோம் அது வேறு, நான் என்னை மிகவும் மதிக்கிறேன் என்னுடைய தரம் எனக்கு தெரியும். அதேபோல் என் திறமையும் எனக்கு தெரியும் நான் வேலைக்காக ஒருபோதும் படுக்கையை பகிர மாட்டேன்.

எந்த ஒரு பெண்ணும் வேலைக்காக படுக்கையை பகிர மாட்டேன் என துணிச்சலாக சொன்னால் காஸ்டிங் கவுச் என்பதே இல்லாமல் போய்விடும் என மிகவும் தைரியமாக ஆண்ட்ரியா பேசியுள்ளார்.

andriya-1
andriya-1