என்னுடைய தங்கைக்கு திருமணம் ஆகிவிட்டது எனக் கூறி புகைப்படத்தை பகிர்ந்த ஆண்ட்ரியா.?

0
Andrea
Andrea

தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வரும் ஆண்ட்ரியாவின் தங்கைக்கு திருமணம் ஆகி விட்டதாக சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

பாடகியாக இருந்து பிறகு நடிகையாக உருவெடுத்தவர் நடிகை ஆண்ட்ரியா தற்பொழுது இவர் நடிகைகள் மட்டுமல்லாமல் சிறந்த பாடகியாகவும் தமிழ் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். சரத்குமார் நடிப்பில் வெளியாகிய பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் நடிகையாக உருவெடுத்தார் அதன் பிறகு ஆயிரத்தில் ஒருவன் வடசென்னை மங்காத்தா விஸ்வரூபம் என பல திரைப்படங்களில் நடிகையாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

அதுமட்டுமில்லாமல் ஒரு சில திரைப்படங்களில் வில்லியாகவும் நடித்துள்ளார். மேலும் தெலுங்கில் வெளியான புஷ்பா என்ற திரைப்படத்தில் ஓ சொல்றியா மாமா உ சொல்றியா என்ற பாடலை பாடி  இருந்தார் இந்த திரைப்பட பாடல் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. தெலுங்கு பாடலை விட தமிழ் பாடல் தான் மிகப்பெரிய வெற்றியடைந்தது இந்த நிலையில் இவர் விஜயின் மாஸ்டர் அரண்மனை மூன்று ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

மேலும் ஆண்ட்ரியா தற்பொழுது தனது கைவசம் நோயின்றி வட்டம் மாளிகை ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு 2 என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது இந்த திரைப்படத்தை என்டர்டெயின்மென்ட் முருகானந்தம் தயாரித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவது வழக்கம்.

அந்த வகையில் சமூக வலைதளத்தில் ஆண்ட்ரியாவை பின் தொடர்பவர்கள் 2.7 மில்லியன் இருக்கிறார்கள் இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஆண்ட்ரியா திருமண புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் அதாவது தனது தங்கை நாட்டியாவிற்கு திருமணம் நடைபெற்றிருக்கிறது என அறிவித்துள்ளார் நாட்டிய அவர்கள் பெல்ஜியத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார்.

இவர் சிற்றரிக் என்பவரை காதலித்து வந்தார் பின் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாக அவர் பதிவு செய்துள்ளார் இதனாலே ஆண்ட்ரியாவின் தங்கை திருமண புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.