ஆண்ட்ரியா, ரம்யா நம்பீசன் பானியை பின்பற்றும் அதிதிக்கு அவர்களுடைய ராசி கை கொடுக்குமா.!

ஷங்கரின் மகளாக வாரிசு நடிகையாக தற்பொழுது தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருபவர் தான் நடிகர் அதிதி சங்கர். இவர் டாக்டர் பட்டம் முடித்துவிட்டு திரைப்படங்களில் நடிப்பதற்காக சினிமா உலகிற்கு அறிமுகமாகியுள்ளார் தனது தந்தையின் இயக்குனர் பாதையை பின்பற்றாமல் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

அந்த வகையில் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார் அதுவும் தனது முதல் படத்திலிருந்து கிராமத்து பெண்ணாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர் கவனத்தையும் கவர்ந்துள்ளார்.

தனது முதல் படத்திலேயே இவ்வாறு ஷங்கரின் மகள் என்பதால் முன்னணி நடிகரின் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்.மேலும் அதிதி மற்றும் கார்த்திக் இருவரும் இணைந்து நடித்துள்ள விருமன் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி உலகில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக இருக்கிறது.

தற்பொழுது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் ப்ரோமோஷன் பணிகளில் பட குழுமினார்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக அனைவரும் மலேசியா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் ஒரு பாடலை பாடியிருக்கிறார் அதிதி.

தனது முதல் படத்திலேயே நடிப்பு, பாடல் என இரண்டிலும் செம முக்கியத்துவம் உள்ளார் அதோடு மட்டுமல்லாமல் இவர் பாடிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இவ்வாறு தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை பெரும்பாலும் ஒரு சில நடிகைகள் மட்டுமே நடிப்பது, பாடுவது என இரண்டிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் உதாரணமாக மம்தா மோகன்தாஸ், ஆண்ட்ரியா, ரம்யா நம்பீசன் என மூவரும் கடந்த 15 ஆண்டுகளாக கதாநாயகியாக நடித்துக் கொண்டே வெற்றிகரமான பாடகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். நயன்தாரா, திரிஷா இரண்டு பேரையும் தவிர்த்து பல வருடங்களாக திரையுலகில் நிலைத்து  நடிப்பு,பாடல் என இரண்டிலும் அசத்தி வருபவர்கள் இந்த மூவர்கள் மட்டுமே. இவர்களின் மூவரின் ராசி அதிதி சங்கருக்கு ஒர்க் அவுட் ஆகுமா என திரை பிரபலங்கள் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment