அதிகாரப்பூர்வமாக பிசாசு 2 திரைப்படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட ஆண்ட்ரியா.!

வெள்ளித்திரையில் மக்களுக்கு மிகவும் பிடித்த கதையம்சம் கொண்ட திரைப்படங்களை இயக்கி அதன் மூலம் மக்களிடையே பிரபலமாகும் இயக்குனர்களில் மிகவும் முக்கிய இயக்குனராக திகழ்பவர் மிஸ்கின் இவர் மற்ற இயக்குனர்களை போல் இல்லாமல் தனது திரைப்படம் இப்படித்தான் இருக்க வேண்டும்.

என்ற எண்ணத்தில் மிகவும் அற்புதமாக திரைப்படங்களை எடுத்து வருகிறார்.அந்த வகையில் பார்த்தால் இவரது இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பிசாசு இந்த திரைப்படம் வெளியான போது மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் வெளியான பொழுது மக்களை அலர வைத்து விட்டது என்று தான் கூற வேண்டும் அந்த அளவிற்கு இந்த திரைப்படத்தில் அவ்வளவு ஆர்வம் காட்டி மிஸ்கின் இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தார் இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தையும் எடுத்து வருகிறார்கள்.

இந்த இரண்டாம் பாகத்தில் முதன்முதலாக இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா மிஸ்கின் திரைப்படத்திற்காக இசை அமைத்து வருகிறார் படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது திரையரங்குகள் திறந்து விட்டால் உடனே ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூட சமீபத்தில் தகவல் வெளிவந்தது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தை பற்றி புதிதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது அதாவது பிசாசு 2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என்று நடிகை ஆண்ட்ரியா அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆண்ட்ரியாவின் கதாபாத்திரத்தை நாங்கள் மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் எனக் கூறி வருகிறார்கள்.

ஒரு சில ரசிகர்கள் ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம் எங்களுக்கு மிகவும் பிடிக்க வேண்டும் என்பதால் அவர் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி நடித்திருப்பார் என்பது மட்டும் எங்களுக்கு தெரியும் என இவரை பெருமைப்படுத்தும் வகையில் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment