மாடர்ன் உடையில் விழிப்புணர்வு விடுத்த ஆண்ட்ரியா!! அதற்கு ரசிகர்கள் என்ன கூறினார்கள் தெரியுமா !!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் 2005ஆம் ஆண்டு கண்டநாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, தரமணி ,அவள் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஆண்ட்ரியா.

சமீபகாலமாக ஆண்ட்ரியா அவர்கள் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக வடசென்னை, அவள், தரமணி, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களே அவரை தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க வைத்தது. நடிகையாக மட்டுமில்லாமல் பின்னணி பாடகராகவும் தமிழ் சினிமாவில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது ஆண்ட்ரியா அவர்கள் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக ஆண்ட்ரியா அவர்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளார். வீட்டில் போர் அடிக்காமல் இருப்பதற்காக உடற்பயிற்சி, பாட்டு பாடுவது என விழிப்புணர்வு வீடியோ மற்றும் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள் என பலவற்றை நம்முடன் பகிர்ந்து உள்ளார்.

அந்த வீடியோவை பார்த்து அவரது ரசிகர்கள் உங்கள் வார்த்தைகளை கவனிப்பார்கள் என நம்புகிறீர்களா..?  என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

an1
an1

Leave a Comment