கீச் கீச்ன்னு இருக்கும் ஜாக்குலின் குரலை கலாய்த்த ரசிகர்.! ஜாக்குலின் பதிலடியை பார்த்தீர்களா…

0

anchor jacquliene: விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது பணியை தொடங்கி அதிலிருந்து தற்போது தேன்மொழி பிஏ என்கின்ற சீரியலில் களமிறங்கியுள்ளார். இந்த சீரியலில் இவர் நடிப்பு ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது. இவர் தொகுப்பாளராக இருக்கும்போதே இவரின் குரலை வைத்து பலர் இவரை கலாய்த்தார்கள்.

ஆனால் அதனை பொருட்படுத்தாமல் இவர் தனது கேரியரை நோக்கிப் முன்னேறி போய்க்கொண்டிருக்கிறார். மேலும் இந்த தேன்மொழி பிஏ என்கின்ற சீரியலில் நடித்ததன் மூலம் இவருக்கு இல்லத்தரசிகளின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

ஆனால் இவரின் குரலை பலர் கலாய்த்து வருகின்றனர் அதற்கு பதிலளிக்கும் வகையில். ஜாக்குலின் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் “என் குரலை பற்றி யாரும் எந்த ஒரு பதிவும் செய்யக்கூடாது. இந்த குரல் என் அம்மா, அப்பாவிடம் இருந்து எனக்கு வந்தது எனக்கு ரொம்ப பிடித்துள்ளது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதுக்கு என்னால் ஒன்னும் செய்ய முடியாது.

என்ன பேசனும்னு நினைக்கிறீர்களோ நீங்க பேசுங்க, என்ன கலாய்க்கனும்னு நினைக்கிரிங்களோ கலாய்ங்க, எனக்கு என்ன பத்தி தெரியும் நான் நீங்க நினைக்கிற விட பெருசா நினைப்பேன் என கூறியிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல்  அடுத்தவர்களை பார்ப்பதற்கு முன் முதலில் நீங்கள் உங்களை பாருங்கள் என கூறியிருக்கிறார். இதோ அந்த புகைப்படம்.

View this post on Instagram

Look at you before u see others 😂👍

A post shared by Jacquline Lydia (@me_jackline) on