அரபி குத்து பாடலுக்காக பீஸ்ட் படம் பார்க்கலாம்.! நடிகை பதிவிட்ட பதிவு கொந்தளித்த நெட்டிசன்ங்கள்

பீஸ்ட் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது இந்த நிலையில் இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது மேலும் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் நேற்று வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

மேலும் இந்த திரைப்படத்தில் கதாபாத்திரங்கள் சரியாக வடிவமைக்கப்படவில்லை எனவும் கதையில் தொய்வு இருந்தது எனவும் பல மோசமான விமர்சனங்கள் கிடைத்தது. அதேபோல் சினிமா பிரபலங்களும் பீஸ்ட் திரைப்படம் பற்றி தான் பேசி வருகிறார்கள். யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை  விஜய் ரசிகர்களுக்கு இந்த படம் வரப் பிரசாதம் போல் தான் என பல ரசிகர்கள் கூறியுள்ளார்கள்.

அதேபோல் சினிமா பிரபலங்களான விஜய் டிவி தொகுப்பாளர் டிடி டுவிட்டரில் திரைப்படம் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது அரபி குத்து பாடல் ஒன்றே போதும் பீஸ்ட் படம் பைசா வசூல் என கூறி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் டிடியை கலாய்த்து வருகிறார்கள்.

பீஸ்ட் திரைப்படத்தில் உள்ள குறைகளை ஒவ்வொன்றாக சுட்டிக்காட்டி ட்ரோல் செய்து இதை நீங்களே பாருங்கள் என அவருக்கு பதில் அளித்துள்ளார்கள். மேலும் ஒரு சில ரசிகர்கள் நீங்கள் படம் பார்க்காமலேயே இதுபோல் பதிவிடுகிறார்கள் என கலாய்த்து வருகிறார்கள்.

Leave a Comment