சினிமா நடிகைகளை காட்டிலும் சின்னத்திரையில் தொகுப்பாளர்களுக்கு ரசிகர் கூட்டம் அதிகரித்து வருகிறது அந்த வகையில் பல சினிமா பிரபலங்கள் சின்னத்திரையில் இருந்து தான் முன்னேறி வெள்ளித்திரைக்கு வந்துள்ளார்கள்.
அந்த வகையில் சிவகார்த்திகேயன் சந்தானம் வாணி போஜன் என பல நடிகை மற்றும் நடிகர்களை கூறலாம். இந்த நிலையில் சின்னத்திரையில் தான் கலகலப்பாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றிருப்பவர் டிடி.
இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் அடிமை என்றே கூறலாம் அந்த அளவு மிகவும் கலகலப்பாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார், சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்று டிடி சிறிதுகலம் சின்னத்திரையில் தலைகாட்டாமல் இருந்தார்.
விவாதத்திற்குப் பிறகு சின்னத்திரையில் எங்கிட்ட மோதாதே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மீண்டும் தனது பணியை சிறப்பான தொடக்கத்தின் மூலம் ஆரம்பித்தார்.
சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ரசிகர்களுடன் ட்ச்சிலேயே இருக்கும் டிடி அடிக்கடி புகைப் படத்தை வெளியிடுவது ரசிகர்களுடன் உரையாடுவது என வழக்கமாக இருப்பார்.
அந்த வகையில் கருப்பு வெள்ளை புடவையில் கையெடுத்து கும்பிடும் அளவிற்கு குடும்ப குத்துவிளக்காக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
