தனுஷ் பாடலுக்கு dubsmash செய்து விவாகரத்தான கணவரை கலாய்க்கும் டிடி!! வைரலாகும் வீடியோ.

0

anchor dd dubsmash video viral: தனது பேச்சுத் திறமைனால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவர் குழந்தை நட்சத்திரமாக தொகுப்பாளராக அறிமுகமானவர். அன்றிலிருந்து இன்றுவரை விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினி பணியை தொடர்ந்து வருகிறார்.

விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கும் திவ்யதர்ஷினி தற்போது ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சினிமாவுலகில் பிசியாக இருந்து வரும் டிடி தனது நெருங்கிய நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக ஒரு வருடம் மட்டுமே இவர்களுடைய திருமணம் பந்தம் நீடித்தது. அதன்பிறகு இருவரும் சட்டப்படி விவாகரத்து செய்து கொண்டார்கள்.

இவர்களுடைய விவாகரத்திற்கு காரணம் டிடியின் மேல் அதிகப்படியான சர்ச்சைகள் ஏற்பட்டதால் தான் என்று கூறியிருந்தார். அதாவது ஆண்களின் நட்பு வட்டாரம் அதிகமாக இருப்பதன் காரணமாகவும், குடிப்பழக்கம் இருந்ததால் இதனை விட்டுவிடு என்று டிடி கணவர் கூறி உள்ளார். ஆனால் டிடி இதனை ஏற்க மறுத்ததால் விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். அதற்கு டிடி என் மேல் நம்பிக்கை இல்லாத அவருடன் வாழ எனக்கு விருப்பமில்லை என்று அதிகாரப்பூர்வமாக கூறி இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள்.

இவ்வாறு இவர்களின் விவாகரத்து வாழ்க்கை அமைதியாக போய்க் கொண்டிருந்த நிலையில் தற்பொழுது டிடி தனுஷின் பாடலான எனக்கு ராஜாவா நான் வாழ்ந்திருக்கிறேன். இந்தப் பாட்டில் நடுவில் வரும் தேவைப்பட்ட நேரம் அந்த நான்கு பரதேசிகளை காணோம் என்ற வரிகளில் டப்சுமஸ் செய்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த பலர் அவரது கணவரை தான் இப்படி விமர்சித்து வருகிறாரோ என்று கூறி வருகிறார்கள். ஆனால் இந்த பாடல் ஜாலிக்காக செய்ததா அல்லது தனது கணவர் மேலிருக்கும் கோபத்தால் தான் இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளாரா என்று சரியாக தெரியவில்லை.