தீபாவளி ரேஸில் எனக்கு பிடித்த திரைப்படம் இதுதான்.! தொகுப்பாளினி டிடி ஓபன் டாக்.!

0

தொகுப்பாளினிகள் மிகவும் பிரபலமானவர் என்றால் நம்ம டிடி தான், இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள், தொகுப்பாளினி டிடி கடந்த 10 வருடங்களுக்கும் மேல் ஒரே தொலைக்காட்சியில் பணியாற்றி வந்துள்ளார், பல புது விதமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது, ஆனால் திருமணவாழ்க்கை ஒத்து வராததால் இருவரும் மனம் ஒத்து விவாகரத்து பெற்றார், விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் தனது தொகுப்பாளனி பணியைத் தொடங்க ஆரம்பித்துவிட்டார். அதுவும் உற்சாகத்துடன். தற்போது பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் அதுமட்டுமில்லாமல் ஒருசில திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் தீபாவளி ஸ்பெஷலாக ஒரு பேட்டி ஒன்றை கொடுத்தார் அந்த பேட்டியில் தீபாவளிக்கு வெளியான படங்களில் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் துப்பாக்கி திரைப்படம் தான் என கூறியுள்ளார், மேலும் இந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படங்களில் எந்தத் திரைப்படம் என கேட்டதற்கு இரண்டு திரைப்படமும் நன்றாக இருப்பதாக கேள்விப்பட்டேன் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என பதிலளித்துள்ளார்.