பெண் தொகுப்பாளினி கேட்ட நாசுக்கான கேள்வி.! பேட்டியில் இருந்து பாதியிலேயே ஓடிய இரண்டாம் குத்து இயக்குனர்.! வைரலாகும் வீடியோ

0

தமிழ் சினிமாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகிய இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது.

காமெடி கலந்த த்ரில்லர் திரைப்படமாக வெளியாகிய இந்த திரைப்படத்தில் இரட்டை வசனங்களும் ஆபாச காட்சிகளும் இடம் பெற்றிருந்ததால் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது அதனால் வணிக ரீதியாகவும் இந்த திரைப்படம் வெற்றி பெற்றது.

இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இருட்டுஅறையில்முரட்டுகுத்து திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு எடுத்தார்கள், இந்த திரைப்படத்தை சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கிய நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது ஆனாலும் இந்த திரைப்படத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.

அதேபோல் இந்த திரைப்படத்திற்கு எதிராக பாரதிராஜா ஒரு அறிக்கை வெளியிட்டார், அந்த அறிக்கையில் இரண்டாம் குத்து திரைப்படத்தின் டீசரை கண்ணால் பார்க்கவே முடியவில்லை என கேவலமாக கூறினார். அதுமட்டுமில்லாமல் இதையெல்லாம் செய்பவர்கள் வீட்டில் பெண்மக்கள் இல்லையா அவர்கள் இதை கண்டிக்க மாட்டார்களா என கடுமையாக குறிப்பிட்டார் பாரதிராஜா.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக tik.tik.tik படத்தில் இதை பார்த்து கூசாத கண்ணு இப்போ கூசிரிச்சோ என்று பதிலடி கொடுத்தார். அதன் பிறகு தான் செய்தது தவறு என வருத்தப்பட்டு வருத்தம் தெரிவித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

இப்படிப் பல தடைகளுக்கு பின்னர் இந்த திரைப்படம் வெளியாகி இளசுகள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பங்கேற்ற இந்தப் படத்தின் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமாரிடம் பெண் தொகுப்பாளினி ஒருவர் நீங்கள் பெண்களை ஒரு காட்சிப்பொருளாக பயன்படுத்தாமல் ஒரு அடல்ட் காமெடி படத்தை எடுக்க முடியாதா என்று கேள்வி கேட்டிருந்தார்.

இதனால் கடுப்பான இயக்குனர் அப்பொழுது எந்த பெண்ணும் கவர்ச்சியான உடை அணியக்கூடாது என்று ஒரு பெண் நீங்களே சொல்லுகிறீர்கள் பக்குவம் இல்லாத கேள்விக்கு நான் பதில் சொல்ல மாட்டேன் என்று அந்த பெட்டியில் இருந்து பாதியிலேயே சென்று விட்டார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.