வில்லன் நடிகர் ஆனந்தராஜ் சகோதரர் தற்கொலை.! அதிர்ச்சியில் சினிமா பிரபலங்கள்!!

தமிழ் திரையுலகில் பல வில்லன்கள் தோன்றினாலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி திரை உலகில் இன்றுவரை நிலைத்து நிற்கும் நடிகர் ஆனந்தராஜ். இவர் 1998 ஆம் ஆண்டு ஒருவர் வாழும் ஆலயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.இவர் தமிழ் சினிமாவில் மட்டும் தனது திறமையை காட்ட தெலுங்கு ,மலையாளம் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தனது திறமையைக் காட்டி இன்றுவரை நடித்துக் கொண்டிருப்பவர்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான ரஜினி, விஜயகாந்த், என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.இவர் திரைப் படங்களில் வில்லனாக மட்டும் நடிக்காமல் குணச்சித்திர வேடங்களிலும் தனது திறமையான வெளிப்படுத்தியுள்ளார். இதுவரை அவர் சுமார் 130 க்கு மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் இவர் சினிமா திரை உலகில் சுமார் 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சமீபகாலமாக காமெடி கலந்த படங்களில் நடித்து மக்களை மகிழ்ச்சி படுத்தி வருகிறார் இவர் கடைசியாக நடித்த பிகில் இப்படத்தில் தளபதி விஜய் அவர்களுக்கு நண்பராக நடித்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்துள்ளார்.இந்தநிலையில் அவரது குடும்பத்தில் ஒருவரான அவரது சகோதரர் இறந்து உள்ளார். ஆனந்தராஜன் சகோதரரான கனகசபை அவர்கள் நேற்று பாண்டிச்சேரியில் தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து அவரது உடலை கதிர்காமம் என்ற அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கனகசபை, ஆனந்தராஜ் தவிர மற்றொரு இளைய சகோதரர் உள்ளார் என்று தெரியவந்துள்ளது.

Anand-Raj
Anand-Raj

பூர்வீக சொத்தில் மூன்றில் ஒரு பங்கு ஆனந்தராஜிக்கும் மற்றொரு பங்கு தனது இளைய சகோதரருடன் இருந்துள்ளது. இளைய சகோதரருடன் இருந்து தன் பங்கை கேட்டு உள்ளார் கனகசபை அதை தர மறுத்ததால் மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்டார்  கனகசபை. ஆனந்தராஜ் சகோதரர் இறதந்தால் சினிமா பிரபலங்கள் மற்றும் முன்னணி நடிகர்கள் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

actor-anandraj-s-brother
actor-anandraj-s-brother

Leave a Comment