தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இவர் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ளார். அந்தவகையில் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் வெளியாகிய பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளன இவர்கள் கூட்டணியில் உருவாகிய பொல்லாதவன் வடசென்னை ஆடுகளம் அசுரன் ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்ற படங்களாக அமைந்தன.
இந்த நிலையில் வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற திரைப்படத்தை இயக்க இருக்கிறார் அதுமட்டுமில்லாமல் சூரி விஜய் சேதுபதி ஆகியவர்களை வைத்து விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் முடிந்தவுடன் சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
சமீபத்தில் வாடிவாசல் திரைப்படத்திற்கான சோதனை படப்பிடிப்பு நடைபெற்றது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அதில் வெற்றிமாறன் சூர்யா எனப் பலரும் கலந்து கொண்டார்கள். தனுஷ் உச்சத்தில் இருப்பதற்கு வெற்றிமாறனும் ஒரு காரணம் அதனை எப்பொழுதும் தனுஷ் மறக்காமல் நன்றி செலுத்தும் விதமாக அடிக்கடி பேட்டியில் தனுஷ் கூரியுள்ளார்.
இந்தநிலையில் வெற்றிமாறன் கிராஸ் ரூட் பிலிம் நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் அனல் மேலே பனித்துளி என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார் இந்த திரைப் படத்தின் டைட்டிலையும் தற்போது வெளியிட்டுள்ளார்கள்.மேலும் இந்த திரைப்படம் நேரடியாக சோனி லைவ் OTT இணையதளத்தில் வெளியாக இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா ஜெரெமையா முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது படத்தை ஆனந்த் இயக்கியுள்ளார். மேலும் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் நேரிடையாக ott யில் வெளியிட இருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
Happy to release the first look. Good luck to the team. God bless. @AnandKaiser, @VetriMaaran sir, @andrea_jeremiah @GrassRootFilmCo @Music_Santhosh @VelrajR @editor_raja @aadhavkk @Lyricist_Vivek @TherukuralArivu @Umadevi12161646 @THEOFFICIALB4U @SonyLIV @divomovies pic.twitter.com/NJTNwn73pg
— Dhanush (@dhanushkraja) May 9, 2022