முதலமைச்சரை திருமணம் செய்துக்கொண்ட இயற்கை பட நடிகை.! லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

சினிமாவிற்கு அறிமுகமான ஏராளமான நடிகைகள் தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தொழிலதிபர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடுகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவிற்கு இயற்கை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் குட்டி ராதிகா.

இவர் முன்னாள் கர்நாடக மாநில அமைச்சர் குமாரசாமியை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அவருடைய குடும்பத்தினர்களுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கன்னடத்தில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்த குட்டி ராதிகா  இயற்கை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் இந்த படத்தினை தொடர்ந்து வர்ணஜாலம், மீசை மாதவன் உள்ளிட்ட அடுத்தடுத்த சில தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இவருக்கு தமிழில் பெரிதாக நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தொடர்ந்து கன்னடத்தில் பல திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் கன்னடத்தில் இவருடைய நடிப்பில் கடந்த ஆண்டு இரண்டு திரைப்படங்கள் வெளியானது.

kutty rathika

இந்நிலையில் தற்பொழுது குட்டி ராதிகா பைரவி தேவி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இவ்வாறு சினிமாவில் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்த மிகவும் பிசியாக இருந்து வந்த குட்டி ராதிகா கடந்த 2010ஆம் ஆண்டு கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார்.

kutty rathika family

தற்பொழுது இந்த தம்பதியினர்களுக்கு ஒரு மகளும் இருக்கும் நிலையில் குட்டி ராதிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. எனவே ஸ்டைலாக இருக்கும் அவருடைய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

Leave a Comment

Exit mobile version