ஹிட் கொடுத்ததால் ஆணவத்தில் ஆடிய நடிகர்.! பிரம்மாண்ட இயக்குனரை தூக்கி எறிந்த சோகம்.! இப்போ புளம்பி என்ன பண்றது..

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் சங்கர். இவர் தன்னுடைய படங்களில் பொதுவாகவே ஆடம்பரமாக செயல்படுவது இவருடைய வழக்கம் அதிலும் குறிப்பாக இவருடைய படங்கள் என்றாலே அதை தனித்துவம் மிக்க ரசிகர்கள் ரசனைக்கு ஏற்றவாறு இருக்கும் அந்த வகையில் பல திரைப்படங்கள் உருவாகிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இறுதிகட்டப் பணியை நெருங்கிவிட்டதால் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படி தன்னுடைய ஒவ்வொரு படத்தையும் செதுக்கி வரும் இயக்குனர் சங்கர் அவர்கள் ஒரு தரமான கதையை வைத்துக் கொண்டு பிரபல முன்னணி நடிகரிடம் கேட்டிருக்கிறார் ஆனால் அவர் அந்த நேரத்தில் இயக்குனர் சங்கரை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்ததாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகர் சரத்குமார். ஆரம்பத்தில் நடிகராக இருந்து தன்னை செதுக்கிய சரத்குமார் தற்போது முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்திருப்பார். இப்படி சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் சரத்குமார் பிரமாண்ட இயக்குனர் சங்கரின் படத்தை நிராகரித்து உள்ளார் என்பது நம்ப முடியாத ஒரு செய்தியாக உலா வருகிறது ஆனால் இதுதான் உண்மை. அதாவது நடிகர் சரத்குமாரின் திரை வாழ்க்கையில் முக்கியமான ஒரு படம் என்றால் அது சூரியன் திரைப்படம் தான்.

இந்த படத்தை இயக்குனர் பவித்ரன் அவர்கள் இயக்கியிருந்தார் மேலும் இந்த திரைப்படத்திற்கு உதவியாளராக இருந்தவர் இயக்குனர் சங்கர். அதன் பிறகு இயக்குனராக வேண்டும் என்று ஒரு கதையை வைத்துக்கொண்டு சுற்றிக் கொண்டிருந்தார் அந்த படம் தான் ஜென்டில்மேன் இந்த கதையை முதலில் சரத்குமார் அவர்களிடம் தான் கூறினாராம் அதுமட்டுமல்லாமல் அவரை எப்படியாவது இந்த படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று மிக தீவிரமாக இருந்தாராம் சங்கர்.

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தை தயாரிக்கவும் பிரபல தயாரிப்பு நிறுவனமும் முன் வந்திருக்கிறது மேலும் நடிகர் சரத்குமாரை புக் செய்ய சிறிய தொகை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த நேரத்தில் நடிகர் சரத்குமார் அவர்கள் பவித்ரன், ஐ லவ் யூ, இந்தியா ஆகிய திரைப்படங்களில் ஒப்பந்தமாகி இருந்தாராம் அது மட்டுமல்லாமல் இது பெரிய சிக்கலாக வெடித்தது ஏனென்றால் அந்த நேரத்தில் யார் படத்தில் நடிக்கப் போகிறார் என்ற குழப்பம் எல்லாருக்கும் இருந்தது.

இதற்கு முன்பாக சூரியன் என்ற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனரின் படம் ஒன்று கையில் இருப்பதால் மற்ற இயக்குனர்களை கழட்டி விட்டு அவருடன் நடிக்க சென்று விட்டார் அந்த வரிசையில் இயக்குனர் சங்கரும் ஒருவர். அதன் பிறகு தான் ஜென்டில்மேன் திரைப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக் அவர்களிடம் கேட்டிருக்கிறார். அதன் பிறகு தான் கடைசியாக அர்ஜுனிடம் கதையை கூறி அவரை புக் செய்து இருக்கிறார் இயக்குனர் சங்கர்.

அதன் பிறகு அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில்மேன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. அர்ஜுனுக்கு மட்டுமல்லாமல் இயக்குனர் சங்கரிக்கும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்த ஒரே திரைப்படம் இந்த திரைப்படம் தான் என்றும் கூறப்படுகிறது.

Leave a Comment